Reveleer GCC : Reveleer சென்னையில் தனது புதிய GCC-ஐ திறப்பதாக அறிவித்துள்ளது

இந்திய நாட்டில் அதிகப்படியான GCC (Global Capability Center) அலுவலகங்களை ஈர்ப்பதில் பெரும் போட்டியானது நிலவி வருகிறது. உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் சிறந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கின்ற திறனை பயன்படுத்துவதற்காக தமிழ் மாநிலத்தின் பல பகுதிகளில் தங்களுடைய GCC அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.

இந்திய நாட்டில் சென்னை ஆனது தொடர்ந்து டாப் 3 இடங்களில் ஒன்றாக இடம் பெற்று வருகிறது. உலகில் அமெரிக்கா, ஜப்பான் என பல்வேறு நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தமிழ் மாநிலத்தின் பல (Reveleer GCC) பகுதிகளில் தங்களுடைய GCC அலுவலகத்தை அமைத்து வருகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சுகாதார தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ரெவிலீர் நிறுவனம் (Reveleer) சென்னையில் தனது புதிய GCC மையத்தை இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது.

Reveleer GCC (Global Capability Center)

இந்த புதிய Reveleer GCC அலுவலகத் திறப்பு, Reveleer நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி ஆகும். AI அடிப்படையிலான (Artificial Intelligence – அதிநவீன செயற்கை நுண்ணறிவு) ஹெல்த்கேர் சொல்யூஷன்ஸ் தேவை இன்றைய மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு Reveleer சென்னையில் (Reveleer GCC) அலுவலகத்தை திறக்க உள்ளது. இது டெக் மற்றும் சுகாதார துறைக்கு மத்தியில் பாலமாக இருக்கும் புதிய வகையிலான சேவைகள், தொழில்நுட்பத்தை உருவாக்கும். Reveleer நிர்வாகம் சென்னை GCC அலுவலகத்தை அதன் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளது. சென்னை Reveleer GCC அலுவலகத்தில் குறிப்பாக, Product Development, Engineering, Operations, Medical Coding மற்றும் Quality Assurance போன்ற துறைகளில் ஊழியர்கள் செயல்பட உள்ளனர்.

Reveleer நிறுவனத்தின் CEO ஜெய் ஏக்கர்மேன் உரை

Reveleer GCC - Platform Tamil

Reveleer நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் ஏக்கர்மேன் Chennai GCC அலுவலகம் குறித்து பேசுகையில் “எங்களது Reveleer நிறுவனத்தின் மதிப்பு அடிப்படையிலான ஹெல்த்கேர் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக நாங்கள் சென்னையில் எங்களது அலுவலகத்தை திறக்க உள்ளோம். மேலும், இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு முதல் Reveleer நிறுவனம் சிறப்பான கூட்டணிகளை உருவாக்கியுள்ளது. எங்கள் Reveleer நிறுவனத்தின் இந்திய குழு, ரெவீலியரின் வணிக முயற்சிகள் மற்றும் புதுமைகளை முன்னேற்றுவதில் ஒரு மூலோபாய பங்கை வகிக்கும். எங்கள் Reveleer-ன் அமெரிக்க சகாக்களின் தடையற்ற நீட்டிப்பாக இந்திய குழு செயல்படும்” என்று கூறினார்.

மேலும் Reveleer-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.அக்கர்மேன் பேசுகையில் “இந்தியாவில் 2016 முதல் நாங்கள் விதிவிலக்கான கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், எங்கள் Reveleer-ன் விரிவாக்கம் ஆழமான திறமையாளர்களை ஈடுபடுத்தவும், புதுமைகளை விரைவுபடுத்தவும், பணம் செலுத்துபவர்கள் மற்றும் வழங்குநர்கள் செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளி பராமரிப்பை மேம்படுத்தவும், அவர்களின் நிதி செயல்திறனை வலுப்படுத்தவும் உதவும். 

இந்த புதிய Chennai Reveleer GCC அலுவலகத்தை வழிநடத்தவும், மற்றும் அதன் வளர்ச்சியை மேற்பார்வையிடவும், இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக சண்முகம் நாகப்பன் Reveleer நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக இயக்குநர் சண்முகம் நாகப்பன் Reveleer புதிய GCC அலுவலக மையத்தை வழிநடத்தி அதன் வளர்ச்சியை மேற்பார்வையிடுவார்.

Latest Slideshows

Leave a Reply