Revolver Rita Title Teaser: ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டைட்டில் டீசர் (Revolver Rita Title Teaser) வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ரிவால்வர் ரீட்டா

இதையடுத்து, இயக்குநர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் அஜய் கோஷ், சுனில், ஜான் விஜய், சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டீசரை (Revolver Rita Title Teaser) படக்குழு நேற்று வெளியிட்டது.

Revolver Rita Title Teaser

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டைட்டில் டீசரில், காய்கறி கடையில் நின்று கொண்டிருந்த கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக் கொள்ளையடிக்கப்படுகிறது. ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்த கொள்ளையர்கள் உள்ளே கத்தி, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த காட்சியில், கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் கீர்த்தி மாஸ் என்ட்ரி செய்கிறார். அவர் தனது உடைமைகளை மீட்டெடுக்கிறார். இடையில் அவர் சண்டை போடும் காட்சிகள் வந்து செல்கின்றன. ஆனால், தொடர்ந்து, கலர் அடித்த தலைமுடி, விதவிதமான சிகை அலங்காரங்கள் மற்றும் நிறத்தை வைத்து ஒரு தரப்பினரை திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் சித்தரிப்பது தவறு. படத்தின் அறிமுகத்தை டீசர் (Revolver Rita Title Teaser) வெளிப்படுத்தியது.

Latest Slideshows

Leave a Reply