Rice Dispensing ATM Machine : இந்தியாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி வழங்கும் ATM மிஷின்

India's First Rice Dispensing ATM Machine In Bhubaneswar :

இந்தியாவின் புவனேஸ்வரில் இந்த அரிசி ATM மையத்தை உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா திறந்து வைத்துள்ளார். இது ஒடிசாவின் முதல் அரிசி ATM ஆகும். இந்த அரிசி ATM பல்வேறு சோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. விவசாய மக்களின் நன்மைக்காக மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய திட்டம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அரிசி வழங்கும் இந்த ATM இயந்திரத்தில் (Rice Dispensing ATM Machine) குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம்.

சரியான எடையில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இனி நியாய விலை கடைக்கு முன்பு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை நன்றாக குறைக்க முடியும். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறை (Rice Dispensing ATM Machine) ஆனது தொடங்கப்படும். அமைச்சரின் கூற்றுப்படி, ஒவ்வொரு ரேஷன் கார்டு பயனாளிக்கும் ஒரு கார்டு ஆனது வழங்கப்படும். இந்த கார்டு மூலம் நாட்டில் எங்கிருந்தும் இத்தகைய ATM-களில் இருந்து அரிசி பெற பயன்படுத்தாலம்.

இந்த ATM-ஐ ஒடிசாவில் 30 மாவட்டங்களில் விரிவுபடுத்த (Rice Dispensing ATM Machine) முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அரிசி ATM-கள் படிப்படியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைக்கப்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்போது உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொய்யான ரேஷன் கார்டு பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, புதிய தகுதியுள்ள பயனாளிகள் விரைவில் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக உத்தரவு ஆனது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மத்திய அரசு இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. அரிசி விலை ஆனது முறையற்ற பருவமழை, குறைவான விளைச்சல், போன்ற காரணங்களினால், அவ்வப்போது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அரிசி விலை ஆனது அதிகரித்து விட்டது. மத்திய அரசு அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, அரிசியை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் மற்றும் மலிவு விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply