Richard Plaud Guinness Record - 7,00,000 தீப்பெட்டிகளால் Eiffel Tower
உலகம் முழுவதிலும் ஈபிள் கோபுரம் (Eiffel Tower) ஆனது பிரெஞ்சு சுதந்திரத்திற்கான நினைவுச்சின்னம் மற்றும் பாரிஸிற்கான ஒரு அடையாள குறியீடாக அறியப்படுகிறது. இந்த கோபுரத்தை வடிவமைத்து கட்டிய Alexander Gustav Ebel பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 63 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்க வருகிறார்கள். 1887 முதல் 1889 வரை கட்டப்பட்ட இந்தக் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ள 81-அடுக்குகளுடன் 300 Meters உயரம் மற்றும் தோராயமாக 10,000 Tonnes எடை கொண்டுள்ளது. இந்த கட்டிடத்தின் சதுர அடிப்பகுதி ஆனது, ஒவ்வொரு பக்கமும் 125 மீட்டர் அளவு கொண்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில் உணவகங்கள் உள்ளன.
Richard Plaud Guinness Record :
பிரான்ஸை சேர்ந்த 47 வயதான Richard Plaud என்பவர் 7,06,900 தீக்குச்சிகளையும் 23 கிலோ பசையையும் கொண்டு ஈபிள் கோபுரமாடலை (Richard Plaud Guinness Record) உருவாக்கி உள்ளார். Plaud என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக நேரத்தை செலவழித்து 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஈபிள் கோபுரமாடலை முடித்தார்.அதைத் தொடர்ந்து Plaud தனது வேலையை அங்கீகரிக்க GWRஐ (Guiness World Record) தொடர்பு கொண்டார்.
ஆனால் அவர் ஒரு அடிப்படை பிழை செய்ததால், அதாவது அவரது வேலை தவறான வகையான தீப்பெட்டிகளைப் பயன்படுத்தியதற்காக அங்கீகரிக்கப்படவில்லை. அவரது தலைசிறந்த படைப்புக்கு கின்னஸ் உலக சாதனை தகுதி ஆனது (GWR) மறுக்கப்பட்டது. Richard Plaud தனது பேஸ்புக் பதிவில், “உலக சாதனையை முறியடிக்கும் தனது கனவு மற்றும் நம்பிக்கை பொய்த்துப் போனது. கின்னஸ் புத்தக நீதிபதிகள் நிஜ வாழ்க்கையில் தனது கோபுரத்தைப் பார்க்காமல் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நான் செய்த வேலையை, நான் செலவழித்த நேரத்தை மற்றும் மன ஆற்றலை அவர்கள் அங்கீகரிக்காததுதான் எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. ஏனென்றால் அது எளிதானது அல்ல என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
Richard Plaud Guinness Record : ஆனால் கின்னஸ் புத்தகம் (GWR) ஆனது 09/02/2024 வெள்ளிக்கிழமை தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும், வணிக ரீதியாக கிடைக்காததால், ப்ளாட் தவறான வகை தீப்பெட்டிகளைப் பயன்படுத்தியதாக ஆரம்பத் தீர்ப்பிற்குப் பிறகு, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து அவரது முயற்சி செல்லுபடியாகும் மற்றும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் கருதுகிறது என்று கூறி இப்போது கின்னஸ் இணையதளத்தில், “மிக உயரமான தீப்பெட்டி சிற்பத்திற்கான பதிவு ஆனது Richard Plaud (பிரான்ஸ்) என்பவரால் உயரமான தீப்பெட்டி சிற்பம் 7.18 மீ (23 அடி 6 அங்குலம்) 7 ஜனவரி 2024 அன்று பிரான்ஸ், சாரெண்டே-மரிடைம், சாயோனில் அடையப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது.
Director Of Central Records Services At Guinness World Records, Mark McKinley, “Richard Plaud-டின் நுட்பங்களைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு, மாதிரியை மறுபரிசீலனை செய்ததில், எங்கள் விதிகளுக்குள் சில முரண்பாடுகளை நாங்கள் சரிசெய்து Richard Plaud-க்கு கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வழங்குவதில் மிகவும் (Richard Plaud Guinness Record) மகிழ்ச்சியடைகிறோம். மேலும் Richard Plaud-க்கு கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்