Richest Family In The World : உலக அளவில் மிகவும் பணக்கார குடும்பம்
Richest Family In The World - நான்காயிரம் கோடியில் உலகின் பணக்கார அரண்மனை :
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உலகின் மாபெரும் பணக்கார குடும்பத்திற்கு தலைமை தாங்கி வருகின்றார். அவரது முதலெழுத்துக்களான MBZ என்பதை கொண்டு இவர் அன்போடு அழைக்கப்படுகிறார். அபுதாபியில் உள்ள கில்டட் காஸ்ர் அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் இந்த பணக்கார அரச குடும்பம் வாழ்கிறது. UAE-ல் உள்ள பல அரண்மனைகளில் இது மிகப்பெரியது ஆகும். ரூ.4,078 கோடி மதிப்புள்ள இந்த அரண்மனை ஏறக்குறைய 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த பெரிய குவிமாட அரண்மனையில் 3,50,000 படிகங்களால் ஆன சரவிளக்கு மற்றும் மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள், பிரபலமான கால்பந்து கிளப் மற்றும் 8 பிரைவேட் ஜெட்கள் (Richest Family In The World) உள்ளன.
உலக எண்ணெய் ரிசர்வ்களில் சுமார் 6% இந்த அரச குடும்பத்திற்கு சொந்தமானது ஆகும். அது மட்டுமின்றி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மற்றும் பாடகர் ரியானாவின் பியூட்டி பிராண்டான ஃபென்டி முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல பிரபலமான நிறுவனங்களில் இந்த பணக்கார அரச குடும்பம் (Richest Family In The World) ஆனது பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த பணக்கார அரச குடும்பத்திடம் 700-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இந்த 700-க்கும் மேற்பட்ட கார்களில் 5 புகாட்டி வேய்ரான்கள், ஒரு லம்போர்கினி ரெவென்டன், ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் CLK GTR, ஒரு ஃபெராரி 599XX மற்றும் ஒரு McLaren Mc12 போன்ற உலகின் மிகப்பெரிய SUV ஆகியவை அடங்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, பாரிஸ் மற்றும் லண்டன் உட்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை துபாய் ராயல்ஸ் வைத்திருக்கிறார்கள். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் குடும்பத்தில் மொத்தம் 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். இந்த அரச குடும்பத்திற்கு ஒன்பது குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சகோதரரான Tahnoun Bin Zayed Al Nahyan, குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார். குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 28,000 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது குடும்பத்தின் தலைமை முதலீட்டு நிறுவனத்தின் மதிப்பு 235 பில்லியன் டாலர் ஆகும். இந்த நிறுவனம் ஆனது பொழுதுபோக்கு, விவசாயம், ஆற்றல் மற்றும் கடல்சார் வணிகங்களுக்குச் சொந்தமானது ஆகும். இந்த நிறுவனம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. நியூயார்க்கரின் அறிக்கையின்படி, 2015ஆம் ஆண்டு துபாய் அரச குடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் ஒப்பிடக்கூடிய சொத்துக்களைக் (Richest Family In The World) கொண்டிருந்தது. MBZ-ன் அபுதாபி யுனைடெட் குழு UK கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு 2008ஆம் ஆண்டில் வாங்கியது. மான்செஸ்டர் சிட்டி, மும்பை சிட்டி, மெல்போர்ன் சிட்டி மற்றும் நியூயார்க் சிட்டி கால்பந்து கிளப்புகளை இயக்கும் சிட்டி கால்பந்து குழுமத்தின் 81 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்