Richest Person in The World 2023: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்

Bloomberg Billionaires Index – ஸின் 02/06/2023 வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகின்  மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை அமெரிக்க கோடீஸ்வரரான எலோன் மஸ்க் பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பிரெஞ்சு கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட் கைப்பற்றினார்.

Bloomberg Billionaires Index குறியீட்டின்படி,  இப்போது எலோன் மஸ்க்கின் மொத்தச் சொத்து தோராயமாக $192 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு $186 பில்லியன் ஆகும். ஆனால் அதே சமயம் Forbes’ The Richest People In The World list – லில் 211 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் உள்ளார் மற்றும் மஸ்க் 180 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

எலோன் மஸ்க் - ஒரு குறிப்பு

Tesla – லாவிற்கு வெளியே, மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX இன் CEO மற்றும் Twitter இன் உரிமையாளராகவும் உள்ளார். 1990 களில் எலோன் மஸ்க் தனது முதல் நிறுவனமான ஜிப் 2 ஐ எலோன் மஸ்க்  $300 மில்லியனுக்கும் அதிகமாக விற்றபோது  தனது முதல் மில்லியன்களை சம்பாதித்தார். பின்னர் எலோன் மஸ்க்  X.com ஐ அறிமுகப்படுத்தினார்.  X.com ஐ, ஆனது இறுதியில் PayPal ஆகியது. அது 2002 இல் $1.5bnக்கு ஈபேக்கு விற்றது.

எலோன் மஸ்க் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை வைத்திருந்தாலும், வரலாற்றில் இதுவரை யாரும் இழக்காத மிகப்பெரிய செல்வத்தை இழந்த சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.  மஸ்க் கடந்த 2022ஆம்  ஆண்டின் பிற்பகுதியில் மிகப்பெரிய  $200 பில்லியன் செல்வத்தை இழந்த முதல் நபர் ஆனார்.  நவம்பர் 2021 இல் $340 பில்லியனாக இருந்த அவரது நிகர மதிப்பு டிசம்பர் 2022 இல் $137 பில்லியனாக சரிந்தது.

2021ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ஆனது 320 பில்லியன் டாலர்களில் இருந்து ஒரு கூர்மையான வீழ்ச்சி கண்டது. எலோன் மஸ்க் 2023 ஆம் ஆண்டை 138 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தொடங்கினார். எலோன் மஸ்க் தனது செல்வத்தில் இந்த ஆண்டு $55.3 பில்லியனுக்கும் மேலாக கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளார். பெரும்பகுதி செல்வம் செல்வம் ஆனது  Tesla – லாவின் பங்குகளில் இருந்து வருகிறது மற்றும் மின்சார கார் நிறுவனத்தின் பங்குகள் மே மாதத்தில் 24% உயர்ந்துள்ளது. இந்த உயர்வு அவரை இழந்த  கிரீடத்தை மீண்டும் எடுக்க வழிவகுத்தது. தற்போது அவரது நிகர மதிப்பு ஆனது 195 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Eikon தரவுகளின்படி, மின்சார கார் தயாரிப்பாளரின் பங்குகள் மே மாதத்தில் சுமார் 24% உயர்ந்ததை அடுத்து, CEO அவரது செல்வம் இந்த ஆண்டு 40.3% உயர்ந்து $192 பில்லியனை எட்டியது. ஃபேக்ட்செட் தரவுகளின்படி, டெஸ்லாவின் 13% பங்குகளை மஸ்க் வைத்திருக்கிறார்.

உலகின் முதல் 5 பணக்காரர்கள்

1.எலோன் மஸ்க் – $187 பில்லியன்

2.பெர்னார்ட் அர்னால்ட் – $185 பில்லியன்

3.ஜெஃப் பெசோஸ் – $117 பில்லியன்

4.பில் கேட்ஸ் – $114 பில்லியன்

5.வாரன் பஃபெட் – $106 பில்லியன்

எலோன் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட்  மற்றும் ஜெஃப் பெசோஸ் மூவரும் அவ்வப்போது  முதல் மூன்று இடங்களை மாற்றிக்கொள்கின்றனர்.

Amazon  நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2021 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆனார்.  தற்போது Bloomberg Billionaires Index குறியீட்டில் 117 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். LVMH  நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆனார்.  தற்போது Bloomberg Billionaires Index குறியீட்டில் $185 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம்  இடத்தில் நீடிக்கிறார். Bloomberg Billionaires Index குறியீட்டில் எலோன் மஸ்க் – $187 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன்  முதலாம் இடத்தில்  உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply