Richest Politician In The World : உலகின் பணக்கார அரசியல்வாதி ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்

அதிபர் புடினின் சொத்து மதிப்பு மட்டும் 716 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என (Richest Politician In The World) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் புடினின் சொத்து மதிப்பு ஆனது 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என பதிவு செய்யப்பட்ட போதும், உண்மையில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆனது குறிப்பிடுகிறது. உலகிலேயே மிகவும் பணக்கார அரசியல்வாதி ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் சொத்து மதிப்பு 16 லட்சம் கோடி ஆகும். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னிடம் 800 சதுர அடி வீடு மற்றும் 3 கார்கள் மட்டுமே இருப்பதாக முன்பு தெரிவித்திருக்கிறார்.

Richest Politician In The World - விளாதிமிர் புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து உலாவும் பல்வேறு தகவல்கள் :

2012-ம் ஆண்டு முதல் விளாதிமிர் புதின் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். விளாதிமிர் புதினின் மொத்த சொத்து மதிப்பு ஆனது 200 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) என்றும் அவருக்கு கருங்கடலை ஒட்டி 1.9 லட்சம் சதுர அடியில் மிகப்பெரிய மாளிகை (Black Sea Palace) உள்ளது என்றும் கூறப்படுகிறது. புதின் சொத்துகளில் முக்கியமானது இந்த Black Sea Palace மாளிகை, இதை மக்கள் விளாதிமிர் புதினின் கன்ட்ரி காட்டேஜ் (Country Cottage) என்று அழைப்பார்கள். இந்த Black Sea Palace மாளிகையின் உட்புறம் மட்டுமே சுமார் $500,000 (சுமார் 4.2 கோடி) டாலர் மதிப்புள்ளதாக இருக்கிறது. இந்த மாளிகையில் உள்ள டைனிங் ஹாலை 4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மாளிகையில் உள்ள சாப்பாட்டு அறையில் உள்ள பொருட்களின் மதிப்பு மட்டும் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அழகிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த மாளிகை (Black Sea Palace) கிரேக்க கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பளிங்கு நீச்சல் குளத்தைக் கொண்டுள்ளது. ஒரு ஆம்பிதியேட்டர், ஒரு மாநிலம் – கலை ஐஸ் ஹாக்கி வளையம், ஒரு வேகாஸ் பாணி கேசினோ மற்றும் ஒரு இரவு விடுதி உள்ளிட்டவை இந்த மாளிகையில் (Black Sea Palace) இடம் பெற்றுள்ளன. இந்த மாளிகையில் உலகின் தலைசிறந்த இன்டீரியர் பொருட்கள்.

  • $54,000 மதிப்புள்ள ஒரு பார் டேபிள்
  • ரூ.4.15 கோடி மதிப்புள்ள ஒரு உணவு மேஜை
  • $850 விலையில் இத்தாலிய டாய்லெட் பிரஷ்கள்
  • $1,250 டாய்லெட் பேப்பர் ஹோல்டர்களை

போன்ற விலையுயர்ந்த பொருட்களே இதில் நிரம்பியுள்ளன. 40 பேர் கொண்ட ஊழியர்கள் இந்த பிரமாண்ட மாளிகையைப் பராமரிக்க வேலை செய்கிறார்கள். மாதம் 2 மில்லியன் டாலர் (ரூ.16 கோடி) ஆனது இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மட்டுமே  செலவிடப்படுகிறது. இந்த மாளிகையின் மதிப்பு ஆனது ரூ.11,500 கோடி ஆகும். இந்த கருங்கடல் மாளிகை சார்ந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கருங்கடல் மாளிகை தவிர்த்து விளாதிமிர் புதினிடம் உள்ள சொத்துக்கள் :

  • 19 பிரம்மாண்ட வீடுகள்
  • 700 கார்கள்
  • 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
  • அவரிடம் உள்ள ஆடம்பர வாட்ச்களின் மதிப்பை எடுத்தால் அவை மட்டுமே அவரது அதிகாரப்பூர்வ ஆண்டு சம்பளத்தை விட ஆறு மடங்கு அதிகமாக (6 லட்சம் டாலர் (ரூ.5 கோடி)) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஒரு தியேட்டர்
  • ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க்
  • கேசினோ
  • ஒரு இரவு விடுதி
  • ‘தி ப்ளெயிங் கெர்மிலின்’ என்ற விமானத்தின் மதிப்பு மட்டுமே 716 மில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) ஆகும். இந்த விமானத்தில் தங்கத்திலான கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
  • 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெஹரசாட் என்ற சொகுசு படகு.

இவர் மிகப்பெரும் நாட்டின் அதிபராக இருந்தாலும் விளாதிமிர் புதினினுக்கு ஆண்டு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விளாதிமிர் புதின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல லட்சம் கோடி சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளார். பல சர்வதேச ஊடகங்கள் இது பற்றி உண்மைகளை வெளியிட்டு வருகின்றன. இவருக்கு அதிகப்படியான சொத்துக்கள் இருந்தாலும் அதன் உண்மைத் தகவல்கள் முழுவதுமாக வெளியே தெரிவதில்லை. ஏனெனில் விளாதிமிர் புதினின் ரகசியங்களை வெளியிடுவோர் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்த அளவுக்கு விளாதிமிர் புதின் பலம் பொருந்திய அரசியல் தலைவராகத் (Richest Politician In The World) திகழ்கிறார். அதிபர் புடினின் சொத்து மதிப்பு ஆனது 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என பதிவு செய்யப்பட்ட போதும், உண்மையில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆனது குறிப்பிடுகிறது. கடந்த 1990-களில் புதின் முதலில் அதிகாரத்திற்கு வந்த நிலையில், அப்போது முதலே இந்த தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் சொத்து மதிப்பு ஆனது  துல்லியமாக எவ்வளவு என்பது இதுவரை புரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply