Rinku Singh : ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து பினிஷிங் செய்த ரிங்கு சிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் :

நம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதிலிருந்து பல்வேறு நாடுகளில் இதே போன்று டி20 லீக் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். முதலில் ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் எனும் பெயரில் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாடாக அவர்களின் நாட்டிற்கு ஏற்ப பெயர்களை மாற்றிக்கொண்டு லீக் போட்டிகளை நடத்திக் கொண்டது.

நாடுகளுக்கு நாடு இப்படி செல்ல அதன் பிறகு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்க முடிவு செய்தனர். முதன்மையாக நம் தமிழகத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது அனைத்திற்கும் முதன்மையான காரணம் நம் உள்ளூரில் உள்ள இளம் வீரர்களின் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். இதனால்தான் நம் தமிழ்நாட்டில் உள்ள சாய் சுதர்சன் என்னும் சிறுவன் அருமையாக விளையாடி தற்போது இந்திய அணி வரை சென்று உள்ளார். இதேபோன்றுதான் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் சூப்பர் ஒருவரை சென்று அதில் ஹார்ட்ரிக் சிக்சர் அடித்து நம் கொல்கத்தா நட்சத்திர வீரர் Rinku Singh வெற்றி பெற வைத்து மீண்டும் ரசிகர்கள் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் கொல்கத்தா அணிக்காக விளையாடி பிரபலமானவர் Rinku Singh. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் என்னும் பவுலர் வீசிய பந்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இருந்தாலும் இதை அவர் திறமையின் மூலம் தான் அடித்தாரா அல்லது ஏதோ ஒரு போட்டியில் எதார்த்தமாக அடித்தாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளை வென்று தந்து தமது திறமையை நிரூபித்து விட்டார். இதனால் கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கூட இவருக்கு இந்திய அணி வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியில் கூட அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது கடைசியில் வந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Rinku Singh - சூப்பர் ஓவர் :

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் டி20 லீக் தொடரில் அதே மாதிரி பினிஷிங் செய்துள்ளார். காசி அணிக்கும் மீரட் அணிகளுக்கும் இடையேயான போட்டி ஒன்றில் மீரட் அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்களை குவித்தது. இதில் காசி அணி அதே 180 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி தான் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ரூல்ஸ் உண்டு. இதன்படி காசி அணி முதலில் பேட்டிங் ஆடி 6 பந்துகளுக்கு 16 ரன்கள் சேர்த்தது. ஒரு ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி அந்த கடினமான இலக்குடன் மீரட் அணி களம் இறங்கியது. மீரட் அணியில் Rinku Singh களம் இறக்கப்பட்டார். அவர் மிகவும் சாதாரணமாக தொடர்ந்து மூன்று சிக்ஸர்களைப் பறக்க விட்டு ஆட்டத்தை முடித்து விட்டார். இந்த மிரட்டல் ஆன ஆட்டம் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply