Ritika Singh Joins Thalaivar 170: தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங்

Ritika Singh Joins Thalaivar 170: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்த ரஜினிகாந்த் தற்போது T.J ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

ஜெய் பீம் படத்தில் ஆழமான சமூகக் கருத்தை பதிவு செய்த இயக்குனர் T.J ஞானவேல், இரண்டாவது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார். இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் உருவாக்கப் போகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் இணையும் நடிகர்களின் பெயரை வைத்தே சொல்லலாம். சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் பெயர்களும் வெளியானது.

Ritika Singh Joins Thalaivar 170

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. ஜெயிலருக்குப் பிறகு, ரஜினிகாந்த் இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது, மேலும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராணா டகுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு நடிகை படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ritika Singh Joins Thalaivar 170: இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தற்போது ரித்திகா சிங் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், ரித்திகாவும் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் லியோ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply