Ritika Singh Shares Pic with Rajinikanth: ரஜினிகாந்துடன் நடிகை ரித்திகா சிங்

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் தற்போது ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். நடிகை ரித்திகா சிங் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில், ரஜினிகாந்துடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் ரஜினியின் காட்சிகள் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. லால் சலாம் ரசிகர்களுக்கு போனஸ் என்றே சொல்ல வேண்டும். ரஜினி ரசிகர்கள் அனைவரும் இப்போது வேட்டையன் படத்தின் அப்டேடிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது ரஜினிகாந்த் த.சே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வேட்டையன் படப்பிடிப்பு (Ritika Singh Shares Pic with Rajinikanth)

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் தொடங்கியது. அதன்பிறகு தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரித்திகா சிங் காயமடைந்தார். கண்ணாடியில் மோதியதில் அவரது உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு ரித்திகா சிங் காயங்களில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்துடன் ஆங்கிலப் பாடலைப் பதிவிட்ட அவர், ரஜினிகாந்துடன் நடிப்பதை தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply