Riyan Parag Selected Emerging Asia Cup: மீண்டும் ரியான் பராக்கை தேர்வு செய்தது ஏன்?
ACC எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ACC வளர்ந்து வரும் வீரர்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் ஜூலை 13 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 8 ஆசிய நாட்டை சார்ந்த அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
மோசமான பார்ம்
அதேபோல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் IPL போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியதது தான் இதற்கு காரணம். ரியான் பராக் 7 போட்டிகளில் 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் பலர் ரியான் பராக்கை விமர்சித்தனர். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ரியான் பராக்கின் இடம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அவரது இடத்தை துருவ் ஜூரல் எளிதில் கைப்பற்றினார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக் இடம் பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை தவிர்த்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரியான் பராக் அற்புதமாக விளையாடி வருவது தான் அவரது தேர்விற்கு காரணம்.
முதல் தர போட்டிகளில் விளையாடிய பராக் 44 இன்னிங்ஸ்களில் 1,420 ரன்கள் அடித்துள்ளார். லிஸ்ட் A போட்டிகளில் 36 போட்டிகளில் 1,308 ரன்களும் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. டாப் மற்றும் மிடில் ஆர்டர்களில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் யாரும் பந்துவீச்சு பக்கத்தில் இல்லாததால், ரியான் பராக் போன்ற வீரர்களை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுதான் ரியான் பராக்கின் தேர்வுக்கு மறைமுகக் காரணம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.