Roasted Chana Dal Benefits: வியக்க வைக்கும் பொட்டுக்கடலை நன்மைகள்

நமக்கு அதிக ஆரோக்கியம் தரக் கூடிய உணவுகளில் ஒன்று பொட்டுக்கடலை(Roasted Chana Dal). இதற்கு வேறு பெயர்களும் உண்டு பொறிக் கடலை, உடைத்த கடலை. பொட்டு கடலையில் பலவிதமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

பொட்டு கடலையில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிர சத்து, செலினியம், பொட்டாசியம், சோடியம் போன்றவையும்,புரத சத்து, போலிக் அமிலம், நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளன. அது  மட்டுமின்றி வைட்டமின் ஏ,  வைட்டமின் பி1,பி2,பி3, வைட்டமின் சி,வைட்டமின் டி போன்ற பல்வேறு விதமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவு பொருள் பொட்டு கடலை. இந்த பொட்டுக்கடலையை (Roasted Chana Dal) அடிக்கடி உண்டு வந்தால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளை பற்றி பார்ப்போம்.  

பொட்டுக்கடலையின் 10 நன்மைகள் (Roasted Chana Dal Benefits)

  1. பொட்டுக்கடலையில் (Roasted Chana Dal) எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதை அடிக்கடி ஒரு கைப்பிடி அளவு உட்கொண்டு வரும்போது எலும்புகள் பலம் அடைய உதவும். எலும்புத் தேய்மானம் மூட்டு வலிகள் ஏற்படுவதை தடுக்கும். எலும்பு மண்டலம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  2. அதிக புரத சத்து நிறைந்த உணவுகளில் பொட்டு கடலையும் ஒன்று இது செல்களை புதுப்பிக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த உணவு. வளரும் குழந்தைகள் பொட்டுக்கடலையை (Roasted Chana Dal) அடிக்கடி உட்கொண்டு வரலாம். அல்லது இதனுடன் வெள்ளம் சேர்த்து பொட்டுக்கடலை (Roasted Chana Dal) உருண்டையாகவும் கிடைக்கிறது அதையும் சாப்பிட்டு வரலாம். இதனால் குழந்தைகளின் மூளை, தசை மற்றும் எலும்பு மண்டல வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  3. உடலில் சர்க்கரை இருப்பவர்களுக்கு பொட்டு கடலை சிறந்த உணவு. சர்க்கரை நோயாளிகள் பொட்டு கடலையை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். அதே சமயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரித்து உடல் சோர்வை, அசதியை குறைக்க உதவும்
  4. உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொட்டுக்கடையுடன், வெல்லம் மற்றும் கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து எடுத்துக்கொண்டால் இவற்றில் உள்ள இரும்புச்சத்து, விட்டமின்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த உற்பத்தியை மேம்படுத்தும்.இதனால் இரத்த சோகையை குணப்படுத்தும்.
  5. மலச்சிக்கல் பிரட்சனையை தீர்க்கும் அற்புத உணவு பொட்டு கடலை குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்தை கொண்டுள்ளதால் பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற செய்து மலச்சிக்கல் பிரச்சனையை குறைகிறது. செரிமான மண்டலம் பலம் அடைய உதவுகிறது.
  6. நரம்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புரதம், வைட்டமின்பி காம்ப்ளஸ் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அடிக்கடி பொட்டு கடலையை உட்கொண்டு வரும்போது நரம்புகள் வலிமை அடைய உதவும்.
  7. உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து வெளியேற்றும் தன்மை பொட்டு கடலைக்கு உண்டு இது குறைந்த கொழுப்பு மற்றும் ஃபோலேட், பொட்டாசியம், நார்ச்சத்தை கொண்டுள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. அதிக உடல் எடை கொண்டவர்கள் பொட்டுக்கடலையை (Roasted Chana Dal) அடிக்கடி ஒரு ஸ்னாக்ஸ் போன்று சாப்பிட்டு வரலாம் இதன் மூலம் பசியை கட்டுப்படுத்தி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும்.
  8. பொட்டு கடலையுடன் மிளகு சேர்த்துஅடிக்கடி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின்கள் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி சளி, இருமல் போன்ற தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவதை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது.
  9. பொட்டு கடலையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
  10. 10. புற்று நோய் வருவதை தடுக்கும் ஆற்றல் பொட்டு கடலைக்கு உண்டு. பொட்டு கடலையில் நிறைந்துள்ள செலினியம் உடலில் உள்ள ஃபிரீ ரடிகள் தன்மையை வெளியேற்ற செய்கிறது. புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுத்து பலவகையான புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. 

Latest Slideshows

Leave a Reply