Rohit Open Talk About Pandya : பாண்டியாவின் கேப்டன்சியில் விளையாடுவது மிகவும் சாதாரணமானது

மும்பை :

விராட் கோலி, தோனி போன்ற கேப்டன்களின் கீழ் விளையாடியதால் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது பெரிய விஷயமில்லை என ரோஹித் சர்மா (Rohit Open Talk About Pandya) தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Rohit Open Talk About Pandya :

இதனால் மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படவுள்ளார். சில நாட்களுக்கு முன் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். மும்பை அணியில் புதிய கேப்டனின் கீழ் விளையாடிய அனுபவம் குறித்த கேள்விக்கு, இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஏற்கனவே பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன்.

எனவே கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக விளையாடுவது புதிதல்ல. அணி நிர்வாகம் எங்களிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை சிறப்பாக செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக சிறப்பாக செய்து வருகிறேன் என்றார். இது ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய அணியில் தோனி, விராட் கோலி, ரஹானே ஆகியோரின் கீழ் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார். இதேபோல், ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரின் கீழ் ரோஹித் சர்மாவும் விளையாடியுள்ளார்.

ரிங்கு சிங் :

டி20 உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாத ரிங்கு சிங்கிற்கு ரோஹித் சர்மா ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து இளம் வீரர் ரிங்கு சிங்கின் கிரிக்கெட் பயணம் உச்சத்தை எட்டியது. ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியின் ஃபினிஷராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என அனைத்து நட்சத்திர அணிகளுக்கும் எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் டி20 உலக கோப்பை தொடரில் ரிங்கு சிங்கின் பெயர் நிச்சயம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா வருகையால் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களிடம் இருந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த ரிங்கு சிங்கும் ஏமாற்றம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாட தயாராக இருந்த நிலையில், ரிங்கு சிங் தனது தாயாரை அழைத்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய அஜித் அகர்கர், ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை. கடைசி வரை ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால் இந்திய அணியின் கலவையை மனதில் வைத்து ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சேர்த்ததாக அவர் விளக்கினார். மும்பையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரிங்கு சிங்குடன் கேப்டன் ரோஹித் சர்மா சில மணி நேரம் செலவிட்டார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததால் வருத்தத்தில் இருந்த ரிங்கு சிங்குக்கு ரோஹித் சர்மா நேரில் ஆறுதல் கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக உயர்ந்த நிலையை எட்டியதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply