Rohit Sharma T20 World Cup Plan : டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்

மும்பை:

2024ல் நடக்கும் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

டி20 உலகக் கோப்பை :

அதன்பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 14 மாதங்களாக டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடவில்லை. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியை தயார்படுத்தும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆர்வம் காட்டினர், இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் களம் இறங்கினர். இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, 50 ஓவர் உலகக் கோப்பை எனக்கு மிகப்பெரிய உலகக் கோப்பை. டி20 உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. சின்ன வயசுல இருந்தே 50 ஓவர் உலகக் கோப்பையைப் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தியாவில் நடந்தால் நிச்சயம் அது மிகப்பெரிய தொடராக இருக்கும். கடுமையாக முயற்சித்தோம். ஆனால், அந்த உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியவில்லை. மொத்த டீமும் சோகமாக இருந்தது. ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர்.

Rohit Sharma T20 World Cup Plan :

இப்போது எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி டி20 உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று யோசித்து வருகிறோம். இந்திய அணிக்காக விளையாடும்போது உத்வேகம் தேவையில்லை. எங்கள் வீரர்கள் அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவுக்காக விளையாட பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால், அதை மிகச் சரியாகப் பயன்படுத்த விரும்புகிறோம். கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு அணி வீரருக்கும் அவரது பங்கு என்ன என்பது பற்றிய தெளிவான யோசனையை நாங்கள் வழங்குகிறோம் என்று ரோஹித் சர்மா (Rohit Sharma T20 World Cup Plan) கூறினார்.

Latest Slideshows

Leave a Reply