Royal Enfield New Plant: திருவண்ணாமலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம்

உலகில் உள்ள பைக் பிரியர்கள் அனைவரின் விருப்பமாக ராயல் என்ஃபீல்டு திகழ்கிறது. அதிக விலை என்றாலும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும்இயங்கி வருகின்றன.

சென்னை, வல்லம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இருப்பினும், நாளுக்கு நாள் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை அந்த நிறுவனத்திற்கு எழுந்துள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை வேறொரு இடத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என கடந்த மாதம் தகவல் வெளியானது.

Royal Enfield New Plant: செய்யாற்றில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்

இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக செய்யாற்றில் 60 ஏக்கரில் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக 2 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. மூன்று விதமான மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளன. இதன் மூலமாக செய்யாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். அப்பகுதியில் 1000 பேருக்கு மேல் வேலை கிடைக்கும் வகையில் புதிய உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply