RRB Apprentices Notification 2025 : இந்தியன் இரயில்வேயில் 4232 பயிற்சி பணியிடங்கள் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி (RRB) வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியன் இரயில்வேயில் காலியாக இருக்கும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (RRB Apprentices Notification 2025) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

RRB Apprentices Notification 2025

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு மொத்தம் 4232 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (RRB Apprentices Notification 2025) 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ (ITI) தொழிற்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27.12.2024 தேதி வரை 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (RRB Apprentices Notification 2025) தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு வருட காலம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.12000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு ஐடிஐ (ITI) பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், இவர்களுக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. விண்ணப்ப கட்டணம் (Application Fees)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக (RRB Apprentices Notification 2025) பொதுப்பிரிவினருக்கு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், SC /ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

இந்தியன் இரயில்வேயில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு வரும் 27.1.2025 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply