RRB Assistant Loco Pilot Recruitment : இந்தியன் இரயில்வேயில் 9900 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் இரயில்வேயில் உதவி லோகோ பைலட் எனப்படும் இரயில் ஓட்டுநர் ஆக வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இரயில்வே லோகா பைலட் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (RRB Assistant Loco Pilot Recruitment) அறிவிப்பை இரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

RRB Assistant Loco Pilot Recruitment

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களை (RRB Assistant Loco Pilot Recruitment) நிரப்புவதற்கு மொத்தம் 9900 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்களும், மெக்கானிக்கல்/எலக்ட்ரானிஸ்/ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

இந்தியன் இரயில்வேயில் இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (RRB Assistant Loco Pilot Recruitment) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.சம்பளம் (Salary)

இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.19900/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Assistant Loco Pilot Recruitment - Platform Tamil

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்தியன் இரயில்வேயில் இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு தேர்வானது கணிணி வழியில் 1, 2 என இரு கட்டங்களாக (RRB Assistant Loco Pilot Recruitment) நடைபெறும் எனவும், இதில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்த பிறகு பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)

இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மற்றும் மகளிருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

இந்த உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு 10.04.2025 தேதி முதல் 09.05.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply