RRB JE 2024 : ரூ.35000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • இரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களுக்கு Railway Recruitment Board (RRB)-யால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன.
  • அந்த வகையில் தற்போது காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (RRB JE 2024) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7,951 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

RRB JE 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு மொத்தம் 7,951 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு டிப்ளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கெமிக்கல் & மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பணியிடத்திற்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் கொண்ட பாடப்பிரிவில் 45 மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. வயதுத் தகுதி (Age) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. சம்பளம் (Salary) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.35,400/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு (RRB JE 2024) விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், எஸ்சி / எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்  கட்டணம் ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  1. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு ஆன்லைனில் Computer Based Test (CBT) தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு மற்றும் மெடிக்கல் தேர்வு நடைபெறும் இம்மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு 30.07.2024 தேதி முதல் 29.08.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
  1. மேலும் விவரங்கள் அறிய : இது தொடர்பான சந்தேகங்களுக்கு https://www.rrbchennai.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply