RRB NTPC Recruitment 2024 : 11,558 காலிப்பணியிடங்கள் 12ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்த அறிவிப்பினை ஆர்ஆர்பி என்டிபிசி National Thermal Power Corporation (NTPC) வெளியிட்டுள்ளது. இந்தியன் இரயில்வேயில் என்டிபிசி பிரிவில் 11,558 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (RRB NTPC Recruitment 2024) வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். இந்தியன் இரயில்வேயில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பணி பாதுகாப்பு, நிறைய சம்பளம் உள்ளிட்ட பல சலுகை இருப்பதால் இரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் ஆர்ஆர்பி என்டிபிசி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

RRB NTPC Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஆர்ஆர்பி என்டிபிசி பிரிவில் Ticket Supervisor & Station Master, Goods Train Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 11,558 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : Ticket Supervisor & Station Master, Goods Train Manager உள்ளிட்ட பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் Ticket Clerk & Accounts Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : Ticket Supervisor & Station Master, Goods Train Manager உள்ளிட்ட பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று வரை 18 வயது முதல் 36 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். Ticket Clerk & Accounts Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  4. சம்பளம் (Salary) : ஆர்ஆர்பி என்டிபிசி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : சிபிடி Computer Based Test (CBT) எனப்படும் கணினி வழியாக 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த ஆர்ஆர்பி என்டிபிசி பணியிடங்களுக்கு (RRB NTPC Recruitment 2024) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த ஆர்ஆர்பி என்டிபிசி பணியிடங்களுக்கு (RRB NTPC Recruitment 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.10.2024 ஆகும்.

  8. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த ஆர்ஆர்பி என்டிபிசி பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  9. மேலும் விவரங்கள் அறிய : https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply