RRB NTPC Recruitment 2024 : 8113 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் இரயில்வேயில் ஒருங்கிணைந்த National Thermal Power Corporation-ல் காலியாக உள்ள ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் டிரெயின் மேனேஜர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது (RRB NTPC Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இந்தியா முழுவதும் 8113 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB NTPC Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் இரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர் (Station Master) பதவிக்கு 994 காலிப்பணியிடங்களும், டிக்கெட் மேற்பார்வையாளர் (Ticket Supervisor) பதவிக்கு 1736 பணியிடங்களும், கூட்ஸ் டிரெயின் மேனேஜர் (Goods Train Manager) பதவிக்கு 3144 பணியிடங்களும், இளநிலை கணக்கு உதவியாளர் (Junior Account Assistant) பதவிக்கு 1507 பணியிடங்களும், மூத்த எழுத்தர் – தட்டச்சு (Senior Clerk – Typist) பதவிக்கு 732 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 8113 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்தியன் இரயில்வேயில் இந்த NTPC பணியிடங்களுக்கு (RRB NTPC Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : இந்த NTPC பணியிடங்களுக்கு 18 வயது முதல் 36 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
- சம்பளம் (Salary) : இந்த NTPC பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.29,200/- முதல் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த NTPC பணியிடங்களுக்கு மொத்தம் 2 நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வான கணினி வழித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டாம் நிலை தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த NTPC பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த NTPC பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், பெண்கள், SC/ST பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த NTPC பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.10.2024 ஆகும்.
Latest Slideshows
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
- Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது