RRB Paramedical Recruitment 2024 : 1,376 பாராமெடிக்கல் காலிப்பணியிடங்கள் நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் இரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஆர்ஆர்பி எனப்படும் இரயில்வே தேர்வு வாரியம் (Railway Recruitment Board) உரிய அறிவிப்புகளை வெளியிட்டு பணியிடங்களை (RRB Paramedical Recruitment 2024) நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது இரயில்வேயில் காலியாகவுள்ள 1,376 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பு என்ன? கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

RRB Paramedical Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு மொத்தம் 1,376 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎஸ்சி செவிலியர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் உணவியல் நிபுணர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி (அறிவியல் பட்டம்) மற்றும் உணவியல் துறையில் ஒரு வருட டிப்ளமோ படித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியின் தன்மைகேற்ப கல்வி தகுதி மாறுபடும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் களப்பணியாளர் பதவிக்கு 20 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்களும், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும் பெர்ப்யூஷனிஸ்ட் பணியிடங்களுக்கு 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு விதிகளின் படி அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

  4. சம்பளம் (Salary) : இந்தியன் இரயில்வேயில் இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு (RRB Paramedical Recruitment 2024) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கணினி வழி தேர்வானது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், ST/SC பிரிவினருக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதிய பிறகு பொது பிரிவினருக்கு ரூ.400 ST/SC பிரிவினருக்கு, ரூ.400 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

  8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்தியன் இரயில்வேயில் இந்த பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply