Rs100 Karunanidhi's Portrait Coin Launch : மு.கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ.100 நாணய வெளியீட்டு விழா

Rs100 Karunanidhi's Portrait Coin Launch Ceremony With M.Karunanidhi's Portrait :

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மறைந்த திமுக தலைவரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா (Rs100 Karunanidhi’s Portrait Coin Launch) ஆனது சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அரசு கலைஞர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை :

திமுக கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக மற்றும் சிறப்பாக கருணாநிதியை பற்றி ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ராஜ்நாத் சிங், “தமிழகத்தில் பல பிராந்திய கட்சிகள் தோன்றி மறைந்தாலும் இன்று வரை திமுக பலமாக இருக்க வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி என்றும், வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர் கலைஞர் கருணாநிதி என்றும், சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் பேற்றினை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவின் டைட்டன் போன்றவர், வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக்காத்தவர், கூட்டாட்சி தத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்திய ஒருமைபாட்டுக்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்தவர்.  கலைஞருக்கு இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள்” என்று புகழாரம் சூட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை :

நாணய வெளியீட்டு விழாவிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்து பேசத் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொல் இடம்பெற்றுள்ளது கலைஞரின் சாதனை ஆகும். கலைஞர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கடந்த ஓராண்டு காலமாக அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம். இப்படிப்பட்ட விழா இந்தியாவில் எந்தத் தலைவருக்கும் நடந்தது கிடையாது. கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் பிரம்மாண்டமான நூலகம், கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து முனையம் போன்ற எத்தனையோ பயனுள்ள அமைப்புகளை கருணாநிதியின் பெயரால் ஏற்படுத்தியிருக்கிறோம். கலைஞர் பெயரில் 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்திருக்கிறது” என்று உரையாற்றினார்.

Latest Slideshows

Leave a Reply