Rudhran Movie Review: தடைகளை உடைத்து வெளியான ருத்ரன்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஏப்ரல்14 ஆம் தேதி “ருத்ரன்” திரைப்படம் உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியானது.
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ் இவர் தற்போது “ருத்ரன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகி இவரே இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ஷியாம் பிரசாத் மேலும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு தடை விதித்த உயர்நீதி மன்றம்:-
இத்திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது இதனால் பரபரப்பை ஏற்படுத்தியது. ருத்ரன் படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது.
டப்பிங் உரிமையை ரூ.12.25 கோடிக்கு தயாரிப்பு நிறுவனத்துடன் ‘ரெவன்சா’ நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. இதற்காக முன்பணமாக 10 கோடி செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. முன்பணம் செலுத்திய நிலையில் மேலும் 4.5 கோடி கேட்டு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
தடையை உடைத்த "ருத்ரன்":-
இதனை தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி தடையை நீக்கி “ருத்ரன்” படத்தை வெளியிட உத்தரவிட்டார். பல தடைகளை தாண்டி வெளிவந்த ‘ருத்ரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாகுந்தலம், யானை முகத்தான், ரிபப்பரி, தமிழரசன், திருவின் குரல் என பல படங்களுடன் ‘ருத்ரன்’ திரைப்படம் இன்று போட்டி போட்டு வருகிறது.
Rudhran Movie Review - ரசிகர்களின் விமர்சனம்:-
இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த விமர்சனங்களை காணலாம்.
* படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி பாடல்கள் இசை சிறப்பாக உள்ளது மற்றும் ஜிவி பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது. மேலும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சிறப்பாக உள்ளதாக பாராட்டி உள்ளார்.
* மற்றொரு பதிவில் படத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் பட டெம்பிளேட் தான் ஆனால் இந்த படத்தில் சண்டை, நடனம், காமெடி, மோஷன் என அனைத்திலும் ராகவா லாரன்ஸ் ஸ்கோர் செய்துள்ளார். குத்து பாடல், சண்டை காட்சிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என பதிவிட்டுள்ளார்.
* இன்னொரு பதிவில் ருத்ரன் திரைப்படம் பழைய படம். இதில் இண்டெர்வெல் சீன் மற்றும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் ரசிக்கும்படி மரண மாஸ் ஆக உள்ளது. என்று தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மொத்தத்தில் திரைப்படம் கமர்சியல் விருந்தாக அமைந்துள்ளது.