Ruduraj Vice Captain: ருதுராஜிக்கு துணை கேப்டன் பதவி...

Ruduraj Vice Captain :

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்த உடன் அயர்லாந்துக்கு செல்கிறது. இதில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ அறிவித்தது. இவ்வளவு நாள் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ருத்ராஜ் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா கேப்டனாக விளையாட உள்ளார். சீனியர் வீரர்கள் பல பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அயர்லாந்து தொடர் :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் நடக்க உள்ளன. இதனால் அயர்லாந்து அணியுடன் விளையாடும்  அறிவித்தது. இது மட்டுமல்லாமல் முதல் முறையாக ஒரு பவுலர் கேப்டனாக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்டிங் ருத்ராஜ் துணை கேப்டனாக விளையாட உள்ளார். அவ்வளவு பெரிதாக இந்திய அணியில் அனுபவம் இல்லாத ருத்ராஜ் ஏற்கனவே ஆசிய போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு பக்கம் சஞ்சு சாம்சன் அவர்களும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு முதல் சாம்சன் விளையாடி வருகிறார். அவர் இருக்கும் போது இப்போது வந்த ருத்ராஜ் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் சாம்சனுக்கு வழங்கும் அநீதியாக இது கருதப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு :

நீண்ட காலமாக ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன் பதவி வகிப்பவர் சஞ்சு சாம்சன். அதுமட்டுமல்லாமல் இதுவரை 17, T20 போட்டிகள் விளையாடி உள்ளார். ராஜஸ்தான் அணியை ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார். நியாயமாக சாம்சன் அவர்களுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த எட்டு வருடமாக சாம்சன் அவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டு இன்னும் தன்னுடைய திறமை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply