Ruturaj Gaikwad Potential: ருதுராஜ் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் தரமான வீரராக வளர்ந்து வருகிறார்!...

ருத்ராஜ் டி20 கிரிக்கெட் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் தரமான வீரராக வருவார் என்று தற்போதைய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம்

தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் ருத்ராஜ் 590 ரன்களை விளாசினார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆட்டத்தில் எக்ஸ்ட்ரா வீரராக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு திருமணம் என்பதால் அவருக்கு பதில் ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார். இந்த நிலையில் அடுத்து நடக்க இருக்கின்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

இன்று தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவரும் ஜெயிஸ்வாலும் இடம் பிடித்துள்ளனர். இதில் ஜெயஸ்வால் கண்டிப்பாக விளையாடுவார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அவர் புஜாராவுக்கு பதிலாக களம் இறக்கப்படலாம். மூன்றாவது வீரராக ஜெய்ஸ்வால் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக ருத்ராஜ் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் நம்பிக்கை

இந்த நிலையில் ருத்ராஜ் T20 அணியில் அவர் தன்னால் என்ன செய்ய முடியும் என நிரூபித்து விட்டார். அதேபோன்று டெஸ்ட் அணியிலும் அவர் நிலைத்து நிற்பார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாடும் போது சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்திய அணியில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு சீனியர் பிளேயர்கள் திணறி வரும் சூழலில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அசால்ட்டாக எதிர்கொள்பவர் ருத்ராஜ். இதனால் ரகானே அவருக்கு பதிலாக ருத்ராஜ் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று விராட் கோலிக்கு பதிலாக சுப்மன் கில் அவர்களும் இறங்க வாய்ப்புள்ளது. அடுத்த சில வருடங்களில் இந்திய அணியின் மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக ருத்ராஜ் களம் இறங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply