Saba Nayagan Trailer : அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Saba Nayagan Trailer :

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் (Saba Nayagan Trailer) வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்து கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். தமிழில் ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை காட் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதில் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை காட்’ திருப்புமுனை படமாக அமைந்தது. அண்மையில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மே 9 ஆம் தேதி வெளியான இப்படத்தை அப்பளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.    

இதனையடுத்து அறிமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். இப்படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி செளத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், வியாசாந்த், அக்‌ஷய் ஹரிஹரன், துளசி சிவமணி மற்றும் பலர் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் ஓ மை காட் படத்தில் ஹிட் பாடல்களை கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை நிலையில், தற்போது புதிய பாடலை வெளியிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Saba Nayagan Trailer : அதன்படி இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சபாநாயகன் படத்தின் ட்ரெய்லர் (Saba Nayagan Trailer) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது படத்தில் காதல் காட்சிக்கும் நகைச்சுவைக்கும்  பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply