Sabarimala Darshan Time : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் தரிசன நேரத்தில் ஒரு மணி நேரம் (Sabarimala Darshan Time) அதிகரிக்கப்பட்டுள்ளது.

அலைமோதும் பக்தர்கள் கூட்டம் :

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், ஏராளமானோர் உடனடி முன்பதிவு மையங்களில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டனர். அதாவது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 1 மணிக்கு மூடப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படும். இதையும் மீறி பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய 10 முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், நிலக்கல்லுக்கு 10 கிலோ மீட்டர் முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரம் அங்கே காத்திருந்த பிறகு, அவர்கள் பம்பை வருகின்றனர். அங்கும் நான்கு மணி நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர். அதன்பிறகு, அப்பாச்சிமேட்டில் சரங்குத்தி பகுதிகளில் பல மணிநேரம் காத்திருப்பிற்கு பின்னரே சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்களுடன் வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

Sabarimala Darshan Time :

தொடர்ந்து, டிசம்பர் 27-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிந்து நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2024 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். ஜனவரி 15ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்நிலையில் இருமுடி கட்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா என்று தந்திரியிடம் கேட்டு கூறும்படி தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. முதலில் மறுப்பு தெரிவித்த தந்திரி மகேஷ் மோகனரரு, பின்னர் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்னன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாலையில் ஒரு மணி நேரம் (Sabarimala Darshan Time) கூடுதலாக நடை திறப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும் நிலையில், 3 மணி முதல் நடை திறக்கலாம் என தேவசம் போர்டு ஆலோசனை கூட்டத்தில் (Sabarimala Darshan Time) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply