Sabarimala Mandala Pooja 2023 : சபரிமலையில் இன்று மண்டல பூஜை | அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Sabarimala Mandala Pooja 2023 :

சபரிமலையில் இன்று மண்டல பூஜை (Sabarimala Mandala Pooja 2023) நடைபெறும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சீசன் காலமாக இருக்கும். இந்த நாட்களில் ஐயப்ப பக்தர்கள் மணி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் தமிழகம், கேரள மாநிலங்கள் ஐயப்ப பக்தர்களின் வருகையால் களைக்கட்டும்.

நடப்பு மண்டல பூஜை சீசனில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,00,969 பேர் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தனர். ஐயப்பன் கோயில் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை (Sabarimala Mandala Pooja 2023) காலம் வரை 41 நாட்கள் திறந்திருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் இன்று மண்டல பூஜை (Sabarimala Mandala Pooja 2023) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வழங்கிய தங்க அங்கி ஆறன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து வீதியுலாவாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 23ம் தேதி ஆறன்முழா கோவிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை பம்பை கணபதி கோவிலுக்கு வந்தது.

தொடர்ந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். தங்க அங்கி அனுவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 11.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் மண்டல பூஜை நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் மற்றும் இரவு பூஜை முடிந்து கோவில் நடை அடைக்கப்படும். இதைத் தொடர்ந்து, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி மாலை மட்டும் கோயில் நடை திறக்கப்படும். வரும் 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு ஜோதி நடக்கிறது. இந்த பூஜைகளை காணவும், ஐயப்பனை தரிசனம் செய்யவும் பக்தர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சபரிமலையில் வரலாறு காணாத பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply