Sachin Receive Lifetime Achievement Award : சச்சினுக்கு டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது

BCCI-யின் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு (Sachin Receive Lifetime Achievement Award) வழங்கப்பட்டது. சச்சின் 24 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

BCCI-யின் மதிப்புமிக்க விருதுகளை பெற்ற பிற வீரர்கள்

●இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.

●ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறந்த சர்வதேச வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

●BCCI-யின் சிறப்பு விருது சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு (Sachin Receive Lifetime Achievement Award) வழங்கப்பட்டுள்ளது.

●சர்ஃபராஸ் கானுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

●ஆஷா சோபனாவுக்கு பெண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

●தீப்தி சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

●அக்ஷய் டோட்ரேவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த நடுவராக விருது வழங்கப்பட்டுள்ளது

●மும்பை வான்கடே உள்நாட்டு போட்டிகளில் சிறந்த செயல்திறன் கொண்ட மைதானமாக விருதை பெற்றுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் உரை

Sachin Receive Lifetime Achievement Award - Platform Tamil

சச்சின் டெண்டுல்கர் இவ்விழாவில் எனது பெயர் விருது பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்றதற்கு (Sachin Receive Lifetime Achievement Award) உண்மையிலேயே நான் நன்றி தெரிவிக்கிறேன். வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சிறந்ததைக் கொடுத்து, தங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திய சில ஆண்டுகளுக்கு பின்புதான் இதை உணரமுடியும். உங்களிடம் உள்ள திறமையை இப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடம் நல்ல திறமை இருக்கும்போது விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதும் நாட்டின் பெயருக்கும் ஏற்ற வகையில் நடந்துகொள்வதும் முக்கியம் ஆகும். விளையாட்டில் கவனச் சிதறல்கள் இருந்தாலும் அதனால் பாதிப்படைந்துவிடாமல் திறமையாக செயல்படுங்கள் என்று கூறினார்.

ICC சேர்மேன் ஜெய்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் மும்பையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் கலந்துகொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply