Sai Sudarshan Record : ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த தமிழன்

சென்னை :

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அபார சாதனை (Sai Sudarshan Record) படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 17 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலி கூட 17 இன்னிங்சில் குறைவான ரன்களே எடுத்துள்ளார். ஆனால், சாய் சுதர்ஷன் பல ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சன், 2023 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 96 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Sai Sudarshan Record:

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 667 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்ஷன் 17 இன்னிங்ஸ்களில் 667 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் தங்களது முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்ஷன் ருத்ருராஜ் கெய்க்வாட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் கவுதம் கம்பீர் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா நான்காவது இடத்திலும், ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். கம்பீர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் அடுத்த தலைமுறை வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா போன்ற அனைத்து சிறந்த வீரர்களையும் விட சாய் சுதர்சன்(Sai Sudarshan Record) முந்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:

  • 667 ரன்கள் – சாய் சுதர்ஷன்
  • 611 ரன்கள் – ருத்ராஜ் கெய்க்வாட்
  • 565 ரன்கள் – கவுதம் கம்பீர்
  • 540 ரன்கள் – திலக் வர்மா
  • 530 ரன்கள் – ரோகித் சர்மா
  • 509 ரன்கள் – தேவ்தத் படால்
  • 505 ரன்கள் – ராகுல் டிராவிட்

குஜராத் அணி தோல்வி :

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் பலம் வாய்ந்த குஜராத் அணி தோல்வியை தழுவியது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஷஷாங் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க 200 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுப்மான் கில் :

இதையடுத்து தோல்வி குறித்து பேசிய கேப்டன் சுப்மான் கில், இந்த ஆட்டத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டோம். இது குறித்து பேசிய அவர், இதுபோன்ற ஆடுகளத்தில் கேட்சுகளை தவறவிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. ஏனெனில் இந்த ஆடுகளத்தில் எத்தனை ரன்கள் எடுத்தாலும் அதை பாதுகாப்பது கடினம்.

ஆட்டத்தின் புதிய பந்து பேட்ஸ்மேன்களுக்கு சற்று அழுத்தத்தை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். நாம் இன்னும் நிறைய மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியில் 200 ரன்கள் என்பது நல்ல இலக்கு என்று நினைக்கிறேன். ஆட்டத்தின் 15வது ஓவர் வரை ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் கேட்சை தவறவிட்டால் சிக்கலில் சிக்குவது நிச்சயம். கடந்த போட்டியில், நால்காண்டு அபாரமாக பந்துவீசினார். எனவே இன்றைய ஆட்டத்திலும் அவரைப் பயன்படுத்தினால் நல்லது என்று நினைத்தோம் ஆனால் ஷஷாங்க் சிங்
சிறப்பாக விளையாடினார். இதுதான் ஐபிஎல் தொடரின் பெருமை. தெரியாத வீரர்கள் கூட களத்தில் வந்து அடித்து வீழ்த்தி வெற்றி பெற வைப்பார்கள் என்று பாராட்டினார். இந்த தோல்வியின் மூலம் குஜராத் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply