Sakthi Awards - புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2024

Sakthi Awards - கருணைக்கான சக்தி விருது

புதிய தலைமுறை ஆனது சாதனைத் தமிழர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி (Sakthi Awards) கொள்கிறது. புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஆனது உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை புதிய தலைமுறை கடமையாக கொண்டிருக்கிறது. Sakthi Awards – 10 ஆவது ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழாவில் 31 லட்சம் ஆமைகளைக் காத்த சுப்ரஜா தாரணிக்கு கருணைக்கான சக்தி விருது 2023 ஆனது வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் - ஒரு குறிப்பு

ஆண்டு தோறும் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆனது சாதனைத் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களைக் கொண்டாடும் விதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக,

  • தமிழன் விருதுகள்
  • சக்தி விருதுகள்
  • ஆசிரியர் விருதுகள்

என ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது. சமூகம் தளைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த  விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் Sakthi awards வழங்கப்பட்டு வருகின்றன.

  • தலைமை
  • திறமை
  • துணிவு
  • புலமை
  • கருணை
  • வாழ்நாள் சாதனை

என 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆய்ந்து அதிலிருந்து சிறந்தவர்கள் விருதாளர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த 6 பிரிவுகளில் சாதனையாளர்களையும் நம்பிக்கை நட்சத்திரங்களையும் அடையாளம் கண்டு அவர்களை கொண்டாடும் விதமாக தமிழன் விருதுகள் வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆனது கொரோனா காலக்கட்டமான 2 ஆண்டுகளை மட்டும்  தவிர்த்து தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த விருது விழா ஆனது 10 ஆவது ஆண்டை எட்டியுள்ளது. புதிய தலைமுறை ஆனது சாதனைத் தமிழர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

17/02/2024 சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் சக்தி விருது விழா

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழில்முறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக 17/02/2024 அன்று சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் மாலை ஆறுமணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் (Sakthi Awards) கலந்துகொள்ள இருக்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுடன் நடக்க இருக்கும் சக்தி விருதுவிழா (Sakthi Awards) 17/02/2024 நாள் நிகழ்ச்சி ஆனது உலக மகளிர் நாள் 08/03/2024 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply