Sakthi Masala Ranks No 1 In Spices Sector : சக்தி மசாலா மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது

சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம் இன்று முதல் இடத்தில் உள்ளது :

34 வருடங்களுக்கு முன்பு சிறு நிறுவனமாக சக்தி மசாலா நிறுவனம் தொடங்கப்பட்டு அவர்களின் நேர்மையான உழைப்பால் உயர்ந்து மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக (Sakthi Masala Ranks No 1 In Spices Sector) உருவெடுத்துள்ளது. சக்தி மசாலா நிறுவனம் தனது எளிமை, நேர்மை மற்றும் உழைப்பிற்காக தமிழக அரசின் விருது பெற்ற நிறுவனம் ஆகும். இந்த மசாலா தயாரிக்கும் தொழில் துறையில் தமிழ்நாட்டின் இரண்டு பிராந்திய பிராண்டுகளான சக்தி மற்றும் ஆச்சி ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.

சக்தி மற்றும் ஆச்சி அவை இரண்டும் ஒன்றாக 70%-80% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இன்று சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம் முதல் இடத்தில் (Sakthi Masala Ranks No 1 In Spices Sector) உள்ளது. தமிழ்நாடு மசாலாவை வீட்டில் நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி அரைக்கும் காலத்திலிருந்து, ‘பயன்படுத்தத் தயார்’ மசாலாக்களுக்காக சக்தி மற்றும் ஆச்சி நிறுவனங்கள் இரண்டும் உருவெடுத்துள்ளன. தமிழ்நாடு ஆனது நாட்டின் மசாலா தயாரிப்பாளர்கள் மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Sakthi Masala Ranks No 1 In Spices Sector - மசாலா தயாரிக்கும் தொழிலில் சக்தி மசாலா முதல் இடத்தில் உள்ளது :

இந்த சக்தி மசாலா நிறுவனத்தை திரு.P.C.துரைசாமி மற்றும் அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் 1977 ஆம் ஆண்டு Rs.10,000 முதலீட்டில் தொடங்கி சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சக்தி மசாலாவை வீட்டில் நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் மசாலா தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள்.

இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் பணிபுரிகிறார்கள். “உழைப்புக்கு எதுவும் தடையில்லை, உங்களால் சிறந்த முறையில் செயலாற்ற முடியும்” என கண், கை, கால் என உடல் உறுப்பில் குறைபாடு இருக்கிற சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுபவர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் நம்பிக்கை கொடுத்து அப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்து வருகிறார்கள். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனையில்லாமல் தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் திரு.P.C.துரைசாமி மற்றும் அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் அக்கரை செலுத்துகிறார்கள். 1977ஆம் ஆண்டு Rs.10,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று Rs.550 கோடி லாபத்தில் செயல்படுகிறது.

Abha Aggarwal, Managing Director and Co-Chair, Consumer, Financial Institutions Group (FIG) Report :

அபா அகர்வால், நிர்வாக இயக்குநர் மற்றும் இணைத் தலைவர், நுகர்வோர், நிதி நிறுவனங்கள் குழு (FIG) & வணிகச் சேவைகள், அவெண்டஸ் கேபிட்டல், “₹2,500 கோடி மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய சந்தையில் தமிழ்நாடு பிராந்திய பிராண்டுகளான சக்தி மற்றும் ஆச்சி ஆதிக்கம் செலுத்துகின்றன, அவை ஒன்றாக 70%-80% பங்கைக் கொண்டுள்ளன. பல தசாப்தங்களாக இந்த மசாலா தயாரிக்கும் தொழில் சந்தையில் பலர் உள்ளனர். குறைந்த பட்சம் 2,000-2,500-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பிராண்ட் செய்யப்படாத சந்தையில் இருப்பதாக மதிப்பிடபட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறிய தயாரிப்பாளர்கள் செயல்படும் இந்த ஒழுங்கமைக்கப்படாத மசாலா சந்தையின் மதிப்பு ₹1,000 கோடிக்கு மேல் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply