Salaar Movie Review : சலார் திரைப்பட விமர்சனம்

Salaar Movie Review :

கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல் இவரது இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் சலார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்பில் நேற்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் விமர்சனம் (Salaar Movie Review) தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சலார் படத்தின் கதை :

ஸ்ருதி ஹாசனை எதிரி கும்பலிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவரை பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார் கோபி. கோபி சொன்ன வார்த்தைக்காக அம்மாவின் எதிர்ப்பையும் மீறி ஸ்ருதியை தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார் பிரபாஸ். தன் அம்மா வாங்கிய சத்தியத்திற்காக வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபாஸுக்கு சீண்டல்கள் அடிக்கடி வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கிறார் பிரபாஸ். ஒரு கட்டத்தில் ஸ்ருதிக்கு ஆபத்து நெருங்க பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்தை திரும்பி வாங்க படத்தில் காட்டு மிருகமாய் சீறி பாய்கிறது பிரபாஸின் ருத்ரதண்டவம். பிரபாஸ் கோபத்திற்கு பின்னால் இருக்கும் பிருத்வி ராஜூக்கும் அவருக்கும் என்ன தொடர்பு அம்மா பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்திற்கு என்ன காரணம் இதில் ஸ்ருதி ஹாசன் சிக்கியது எப்படி? இதன் பின்னணியில்  இருக்கும் கான்சார் எனும் சாம்ராஜ்யம் உருவானது எப்படி? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே சலார் படத்தின் கதை.

வன்முறையின் மொத்த உருவமாக  கதாநாயகன் பிரபாஸ் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் கவனம் செலுத்திருக்கும்  அவர் எமோஷன் சம்பந்தமான காட்சிகளில் திணறுகிறார். ஸ்ருதி ஹாசன் நடிப்பு அவ்வளவு ஆழமாக  தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். பிரபாஸின் நண்பனாகவும் துரோகியாகவும் நடிப்பில் ‘யான் மலையாள சேட்டன்’ என்பதை நிரூபித்து இருக்கிறார் பிருத்திவிராஜ். பிரபாஸின் அம்மாவாக நடித்து இருக்கும் ஈஸ்வரியின் நடிப்பும் அவர் பேசும் வசனங்களும் படத்தில் அற்புதமாக உள்ளது. சலார் படத்தில் அவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பது பிரசாந்த் நீலின் எழுத்தும் திரைக்கதையும் தான்.

Salaar Movie Review : படத்தில் ஒரு சில காட்சிகளை புல்லரிக்க வைத்து இருக்கிறார் அவர். முதல் பாதியில்  கதையை விவரிக்க எடுத்துக்கொண்ட பிரசாந்த் இரண்டாம் பாதியில் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை நிகழ்த்துகிறார். ரவி பன்சூரின் இசை நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. புவனின் கேமரா மிரட்டி இருக்கிறது. படத்தின் கலை இயக்குநர் செய்திருக்கும் வேலை படத்தின் ஆணிவேர். படத்தில் அதிகமான காட்சிகளை வசனங்கள் மூலம் கடத்தியதும் மாஸ் என்ற பெயரில் இடம் பெற்ற சில காட்சிகளும் படத்தின் டோன் தங்க சுரங்கம் என எல்லாம் கே ஜி எப்பை மீண்டும் நியாபகப்படுத்தி (Salaar Movie Review) இருப்பது படத்தின் பலவீனம்.

Latest Slideshows

Leave a Reply