Salaar Release Date: சலார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் கதாநாயனாக பிரபாஸ் நடித்திருந்தார்.

தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் பான் இந்திய ஸ்டாராக வலம் வந்தார். பாகுபலிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதன்படி, அவரது சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தன. அதைத் தொடர்ந்து, பிரபாஸ் ராமாயணத்தைத் தழுவி தெலுங்கு மற்றும் இந்தியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பான்-இந்தியப் படமான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமனாக நடித்தார்.

ஓம் ராவத் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் ஆர்வத்துடன் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.

பிரபாஸ் தற்போது மற்றொரு பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கில் அறிவியல் புனைகதை படமான ‘புராஜெக்ட் கே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் உலக நாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படம் பிரபாஸின் கேரியரில் மிக முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Salaar Release Date:

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் KGF பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், மலையாள நடிகர் பிருத்வி ராஜ் மிரட்டும் வில்லனாகவும் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசைமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் சலார் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் வேலைகள் முடிவடையாத நிலையில், வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply