SAMAR Air Defence System : சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி

SAMAR Air Defence System :

சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை (SAMAR Air Defence System) சோதனை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை Indian Air Force (IAF) அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐஏஎப் அதிகாரிகள் கூறியதாவது, சமீபத்தில் சூர்யலங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்ற ‘அஸ்ட்ராசக்தி – 2023’ பயிற்சியின் போது இந்திய விமானப்படையால் உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய ‘சமர்’ வான் பாதுகாப்பு ஏவுகணை (SAMAR Air Defence System) அமைப்பின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வெவ்வேறு சூழ்நிலைகளில் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இந்த ‘சமர்’ ஏவுகணை துல்லியமாக நிறைவேற்றியது.

இந்த ஏவுகணை அமைப்பு 2 முதல் 2.5 மாக் வேகத்தில் இயங்கக்கூடிய ஏவுகணைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பை வழங்கும். அச்சுறுத்தல் சூழ்நிலைகளைப் பொருத்து சமர் அமைப்பு இரட்டை ஏவுகணைகளை ஏவுவதற்காக இரண்டு ட்ரட் ஏவுதளங்களைக் கொண்டுள்ளது. சமர் ஏவுகணை அமைப்பின் செயல்திறனை விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் திரு.வி.ஆர்.சவுதாரி மற்றும் விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் திரு.ஏ.பி.சிங் ஆகியோர் ஏற்கெனவே நேரில் பார்வையிட்டுள்ளனர்.

தன்னிறைவு திட்டத்தின்படி இந்திய நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தரை ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், உபகரணங்கள் உள்நாட்டில் உருவாக்குவதிலும், அதனை பராமரிப்பதிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி கிடைத்துள்ளது. சமர் வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய விமானப் படையின் 7 Base Repair Depot (பேஸ் ரிப்பேர் டிபாட்) – ஆல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply