Sameer Rizvi IPL Auction : யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடிக்கு ஏலம் சென்றது

Sameer Rizvi IPL Auction - அடிப்படை விலையான அவருடைய 20 லட்ச ஏலம், யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடிக்கு சென்றுள்ளது :

உத்தரபிரதேச வீரரான சமீர் ரிஸ்வி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட உள்நாட்டு வீரர்களில் 20 லட்சத்தில் தொடங்கி 8.4 கோடி விலைக்கு (Sameer Rizvi IPL Auction) சென்றுள்ளார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் இந்த 20 வயது சமீர் ரிஸ்வி தோனியை போன்ற சிறந்த ஃபினிசராக பார்க்கப்படுகிறார். இவர் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்று வீரராகவும் மற்றும் தோனியை போன்ற சிறந்த வீரராகவும் பார்க்கப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற அனைத்து விதமான உள்நாட்டு தொடர்களிலும் வலது கை பேட்டரான சமீர் ரிஸ்வி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீர் ரிஸ்வி உத்திரபிரதேச T20 லீக்கில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக ஒன்பது இன்னிங்ஸ்களில் விளையாடி  இரண்டு சதங்கள் உட்பட 455 ரன்கள் குவித்தார். இதுவரை 11 டி20 போட்டிகளில் சமீர் ரிஸ்வி விளையாடி 49.16 சராசரியில் 295 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதில் IPL தொடரானது தொடர்ந்து பெரிய பங்காற்றி வருகின்றது. அந்தவகையில் 2024 IPL தொடரானது சமீர் ரிஸ்வியை அடையாளம் கண்டுள்ளது. அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சென்ற அவருடைய ஏலம், யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடிக்கு (Sameer Rizvi IPL Auction) சென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இளம் டேலண்டான சமீர் ரிஸ்விக்கு போட்டிப்போட்ட நிலையில், 8.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஆனது தட்டிச்சென்றுள்ளது.

இந்த 20 வயது வீரர் தோனியை போன்ற சிறந்த வீரராகவும் மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்று வீரராகவும் பார்க்கப்படுகிறார். சுரேஷ் ரெய்னாவை போன்றே மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் சமீர் ரிஸ்வி நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்களில் ஒருவர். அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சென்ற அவருடைய ஏலம், யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடியை அள்ளியது.

Latest Slideshows

Leave a Reply