Samsung நிறுவனம் இந்தியாவில் Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

Samsung நிறுவனம் நேற்று இந்தியாவில் புதிய Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகளை விரிவாகப்  பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A25 5G Specifications) :

  1. Galaxy A 25 5G Display : 6.5 இன்ச் (AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. இந்த Samsung Galaxy A25 5G போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் மேலும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு (OS) 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
  1. Galaxy A 25 5G Camera : 50MB  பிரைமரி கேமரா + 5MB  அல்ட்ரா வைடு கேமரா + 5MB  மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18MB கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இந்த Camera உதவியுடன் தரமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.
  1. Galaxy A 25 5G Storage : 8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.

  2. Galaxy A 25 5G Battery : 6000mAh பேட்டரி உடன் இந்த Samsung Galaxy A25 5G ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். 60 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

  3. Galaxy A 25 5G Rate : 8GB RAM + 128GB  மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனின் விலை ரூ.19,999/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 8GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.22,499/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply