Samsung Galaxy S25 Ultra : சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ஜனவரி மாதம் அறிமுகம் செய்கிறது

இந்தியாவில் புதிய Samsung Galaxy S25 Ultra எனும் ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகம் (Samsung Galaxy S25 Ultra) செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்களை பார்க்கலாம்.

2025 ஜனவரி மாதம் அறிமுகம் (Samsung Galaxy S25 Ultra)

1. Samsung Galaxy S25 Ultra Display

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.8-இன்ச் அளவுள்ள அமோலெட் (Amoled) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் விற்பனைக்கு வருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. Samsung Galaxy S25 Ultra Camera

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா + 10MP 3X டெலி போட்டோ கேமரா + 50MP 5X டெலி போட்டோ கேமரா + 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற குவாட் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வருகிறது. இது தவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MP சோனி சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3. Samsung Galaxy S25 Ultra Storage

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் ஆதரவுடன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், IP68 மற்றும் டஸ்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட ஆதரவுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

4. Samsung Galaxy S25 Ultra Colors

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின் படி இந்த Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக் (Titanium Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver), டைட்டானியம் ஜேட்கிரீன் (Titanium Jadegreen), டைட்டானியம் பிங்க் கோல்டு (Titanium Pink Gold) ஆகிய நான்கு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

5. Samsung Galaxy S25 Ultra Battery

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின் படி இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.

6. Samsung Galaxy S25 Ultra Rate

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின் படி இந்த இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.120000/-க்கும் அதிகமான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply