சாம்சங் நிறுவனம் 'Samsung Galaxy Z Fold 6 Slim' ஸ்மார்ட்போனை செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகம் செய்கிறது

சாம்சங் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே இந்த Samsung Galaxy Z Fold 6 Slim ஸ்மார்ட்போன் விலையுயர்ந்த மாடலாக (Most Expensive Samsung Phone) இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்லைனில் கசிந்த  இந்த போனின் பல்வேறு  சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் சிறப்பம்சங்கள் (Samsung Galaxy Z Fold 6 Slim Specifications) :

  1. Samsung Galaxy Z Fold 6 Slim Display : இந்த சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்பிளே (External Display) மற்றும் 8-இன்ச் இன்டர்னல் டிஸ்பிளே (Internal Display) வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தவிர இந்த புதிய ஸ்லிம் மாடலின் மற்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து எந்த தகவல்களும் இணையத்தளத்தில் வெளியாகவில்லை. இந்த கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் (Samsung Galaxy Z Fold 6 Slim) ஸ்மார்ட்போன் ஆனது 10Mm-க்கும் அதிகமான தடிமன் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் மிகவும் மெல்லிய போல்டபிள் ஸ்மார்ட்போனாக (Thinnest Foldable Phone) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  2. Samsung Galaxy Z Fold 6 Slim Camera : சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு வரும் 4MB அண்டர் டிஸ்பிளே கேமராவிலிருந்து கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் மாடலில் 5MB (Under Display Camera – UDC) ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கேமரா அம்சங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்.

  3. Samsung Galaxy Z Fold 6 Slim Rate : ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்லிம் ஸ்மார்ட்போன் 2100 அமெரிக்க டாலராக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் ரூ.1,76,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 25-ம் தேதி அன்று முதலில் தென் கொரியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply