Sandy Master Rosy First Look : சாண்டி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Sandy Master Rosy First Look :

லியோ படத்தில் சீரியல் கில்லராக தோன்றிய சாண்டி புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மிரட்டலான போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கன்னட படத்தில் சாண்டியின் புதிய பாத்திரம் (Sandy Master Rosy First Look) அவரது கேரியரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர்களில் ஒருவராக சாண்டி வலம் வருகிறார். சென்னையைச் சேர்ந்த சாண்டி மாஸ்டரின் இயற்பெயர் சந்தோஷ் குமார் ஆகும். கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக அறிமுகமானார், பின்னர் படிப்படியாக திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்து, ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இணைந்து பணியாற்றிய காலா திரைப்படத்தில் பணிபுரிந்து கவனம் பெற்றார். அதன்பிறகு, 2019 இல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் நடனத்தையும் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களின் வாக்குகளையும் பெற்று பிரபலமானார். பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய சாண்டி, விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவரையும் வாயடைக்க வைத்தது. குறிப்பாக, ‘சாக்லேட் காபி சாக்லேட் காபி’ என்ற வசனத்தை கூறி சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். இந்த வேடத்தில் நடித்ததால் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. எந்த அளவுக்கு என்றால், லியோ படத்துக்குப் பிறகு நேராக கன்னட சினிமாவுக்கே சென்று விட்டார்.

கன்னட சினிமாவில் மாஸ் காட்டப்போகும் சாண்டி :

அதாவது கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கம் புதிய படம் ரோசி. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார். படத்தில் ஆண்டாள் வேடத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். ஆண்டாள் வேடத்தில் நடிக்கும் சாண்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Sandy Master Rosy First Look) வெளியாகியுள்ளது. சாண்டி சிவப்பு நிறத்தில் பெண் வேடத்தில் பயங்கரமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் (Sandy Master Rosy First Look) ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை (Sandy Master Rosy First Look) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நடிகராக புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் படக்குழுவினருக்கும் நல்வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ளார். கன்னடப் படத்தில் சாண்டியின் புதிய கதாபாத்திரம் அவரது கேரியரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply