Sanitation Worker Daughter Become A Commissioner : மன்னார்குடி நகராட்சியில் 'தூய்மை பணியாளர்' மகள் ஆணையாளரானார்

TNPSC-யில் வெற்றி பெற்ற மகள் அப்பா ‘தூய்மை பணியாளராக’ வேலை செய்த மன்னார்குடி நகராட்சியில் (Sanitation Worker Daughter Become A Commissioner) ஆணையாளரானார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய தனது தந்தையின் கனவை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மகள் நிறைவேற்றி உள்ளார். TNPSC-யில் வெற்றி பெற்ற துர்கா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சேகர் மற்றும் அவரது மனைவி செல்வியின் மகள் ஆவார்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் சேகர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். சேகரின் மனைவி செல்வி மன்னார்குடியில் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தார். இவர்கள் இருவரும் தங்கள் மகள் துர்காவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். பின்பு இவர்கள் இருவரும் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் துர்காவை B.Sc படிக்க வைத்துள்ளனர். கடந்த 2015-ல் துர்காவிற்கு 21 வயது இருக்கும் போது துர்காவை சேகர் செல்வி தம்பதியினர் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு கல்யாணம் செய்து வைத்தனர். மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துர்காவின் கணவர் நிர்மல் குமார் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

Sanitation Worker Daughter Become A Commissioner - தனது மகளை அரசு ஊழியராக்க வேண்டும் ஆசைப்பட்ட சேகர் கனவு நிறைவேறியது :

வழக்கமான திருமண வாழ்க்கைக்குள் போன பின்னரும் துர்கா எப்படியாவது அரசு ஊழியராக வேண்டும் என்ற கனவை மட்டும் விடவே இல்லை. கணவன் நிர்மல் குமார் துர்காவின் கனவு அரசு ஊழியர் ஆக வேண்டும் என்பதை அறிந்து அவரை TNPSC-க்கு தயாராகுமாறு ஊக்கப்படுத்தி உள்ளார். கடந்த 2016-ல் முதல் முயற்சியாக குரூப் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து 2020-ல் குரூப் ஒன் தேர்வு எழுதி அதில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால்  அதைத்தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் தோல்வியடைந்தார்.

அதைத்தொடர்ந்து இரண்டு குரூப் 4 தேர்வுகளை எழுதி அதில் கட் ஆப் இல்லாத காரணத்தினால் தேர்ச்சி பெறவில்லை. கடந்த 2022-ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்ற துர்கா, அதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து 2024-ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று மன்னார்குடி நகராட்சி ஆணையாளராக (Sanitation Worker Daughter Become A Commissioner) பொறுப்பேற்றுள்ளார். ஆசைப்பட்ட சேகர் அந்த கனவு நிறைவேறியதை பார்க்காமலே சென்றுவிட்டார். உலகை விட்டு சென்ற தந்தையின் கனவை துர்கா நிறைவேற்றி உள்ளார். பெண் ஒருவர் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த துர்கா சிறந்த உதாரணம்.

Latest Slideshows

Leave a Reply