Santhanam About Nayanthara Children : நயன்தாராவின் குழந்தைகளுக்கு என் மடியில் காதுகுத்து...

Santhanam About Nayanthara Children :

நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு என் மடியில் தான் அமர்ந்து காது குத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வந்த நயன்தாரா, அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. மேலும் திருமணம் நடந்த 4 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் குழந்தை பிறந்தது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியினர் குழந்தைகளின் பெயர் மற்றும் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர். விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளை பற்றி பதிவிடும் போது ‘உயிர்’ மற்றும் ‘உலகம்’ என பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களின் முழுப் பெயரையும் அறிவித்தார். அதன்படி, ஒரு மகனுக்கு ‘உயிர் ருத்ரோநீல் என் சிவன்’ என்றும், மற்றொரு குழந்தைக்கு ‘உலக் தெய்விக் என் சிவன்’ என்றும் பெயர் வைத்துள்ளனர் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அவர்களின் பெயர்கள் எதிர்பாராத விதமாக வித்தியாசமாக இருப்பதாக பலர் கூறினர்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டு பேசியபோது அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகர் சந்தானம் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, வல்லவன் படத்தில் இருந்தே நடிகை நயன்தாரா எனக்கு நல்ல பழக்கம். என்னை அண்ணா என்று அழைப்பார். நானும் அவரை தங்கச்சி என்று அழைப்பேன். ஒரு நாள் நயன்தாரா வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது அவர் தனது குழந்தைகளிடம் மாமா வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினார். உடனே நானும் உங்களுடைய குழந்தைகள் 2 பேருக்கும் என் மடியில் வைத்து காது குத்தணும் என்று சொன்னேன். அதற்கு அவர்களும் சீர்வரிசை எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று உற்சாகமாகப் பேசியதாக தெரிவித்தார். தற்போது நடிகர் சந்தானம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்து பேசிய இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply