Santhosh Narayanan Special Song for CSK: செம மாஸாக பாடல் வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது.

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டலாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது முதல் ஓவரில் மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மழையால் ஓவர்களும் மற்றும் இலக்கும் குறைக்கப்பட்டு சென்னை அணி களமிறங்கி விளையாடியது.

பின்னர் களம் இறங்கிய சிஎஸ்கே மிரட்டலான பங்களிப்பை அளித்தது. இறுதி நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தால் சென்னை அணிக்கு திரில் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இயக்குனர் விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வரலக்ஷ்மி சரத்குமார், தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மைதானத்தில் போட்டியை நேரில் பார்த்து கொண்டாடினர். இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் சென்னை அணியின் வெற்றிக்காகவும் தோனிக்காகவும் விரைவாக தரமான பாடல் ஒன்றை பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த விடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply