Sapota Benefits in Tamil: சப்போட்டா பழத்தின் நன்மைகள் தீமைகள்
சப்போட்டா பழுப்பு நிற சதை கொண்ட இனிப்பு நிறைந்த பழமாகும். சப்போட்டாவை ஜூஸாகக் குடித்தாலும் சரி, அப்படியே சாப்பிட்டாலும் சரி, அதன் சுவை அற்புதமாக இருக்கும். இது ஒரு சீசனில் கிடைக்கும் பழமாகும். குளிர் காலத்தில் பழங்களை உணவில் சேர்க்க கொள்ள விரும்பினால் கண்டிப்பாக சப்போட்டாவை சேர்த்துக்கொள்ளலாம். இது சுவையானது என்பதோடு ஆரோக்கியமாகனதும் கூட. இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாக்டீரியா தொற்றுகளை தடுக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி உள்ளது. இதன் அற்புதமான மருத்துவ குணங்களை தற்போது காணலாம்.
சப்போட்டா பழத்தின் நன்மைகள் (Sapota Benefits in Tamil)
செரிமானத்தை தூண்டுகிறது
உடலில் உள்ள செரிமான அமைப்பை சீராக்குகிறது. குடல் நோய்க்குறி அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன என்பதை நாம் அறிவோம். சப்போட்டாவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, பெருங்குடல் சவ்வை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எலும்புகளுக்கு நல்லது
சப்போட்டாவில் கூடுதல் அளவாக இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. எலும்பு இணைப்பு திசுக்கள் மற்றும் வளர்ச்சிக்கு தாமிரம் அவசியம். தாமிரத்தின் குறைபாடு ஆஸ்டியோபொராசிஸ், தசை பலவீனம், எலும்பு பலவீனம், மூட்டுகளின் மென்மை ஆகியவை அதிகரிக்க கூடும்.துத்தநாகம், கால்சியம், மற்றும் மாங்கனீஸத்து டன் தாமிரத்தை எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் எலும்புகள் மென்மையாகும் பிரச்சனை குறைகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்தின் சர்வேதேச இதழின் சுற்றுப்படி சப்போட்டாவில் டானின்களின் உள்ளடக்கம் உள்ளது. அவை சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவராக உள்ளது. இது உணவுக்குழாய் அழற்சி, அழற்சி குடல் நோய் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நோய்களைத் தடுப்பதன் மூலம் செரிமான மண்டலத்தின் நிலையை மேம்படுத்துகிறது. இது இரைப்பை அழற்சி மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கிறது.
சளி, இருமல் பிரச்சனைகளுக்கு தீர்வு
சப்போட்டாவில் உள்ள சேர்மங்கள் மூச்சுக்குழாய், நாசி துவாரம் மற்றும் கபம் சளியை சுத்தம் செய்வதன் மூலம் நாள்பட்ட இருமலை நீக்குகிறது. இதில் வைட்டமின் C மற்றும் A ஏராளமாக உள்ளது. தினமும் சப்போட்டா சாப்பிடுவது கண் மருத்துவரைத் தவிர்க்கும் அளவுக்கு உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் உள்ள வைட்டமின் A நம் கண்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க செய்கிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது
சப்போட்டாவில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின் A மற்றும் கார்போஹைட்ரேட்டுளால் நிரப்பப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களின் காலை சோர்வைப் போக்க உதவுகிறது. குறிப்பாக உங்களுக்கு தலைச்சுற்றல் பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறிகளை குறைக்கும். பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் சப்போட்டா முழுமையான நன்மையை அளிக்கும். இது கொலாஜன் உற்பத்தியில் பங்கு வகிப்பதால் கர்ப்பிணியின் வயிற்று தழும்புகளை குறைக்க உதவுகிறது.
உடல் பொலிவுடன் இருக்க
சப்போட்டாவை அதிகமாக உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம். இது உங்கள் தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், இது சருமத்தில் ஆழமான சுருக்கங்களைத் தடுக்கிறது. முடிக்கு ஊட்டமளிக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். சப்போட்டாவில் இத்தனை நன்மைகள் இருக்கும் போது நாம் ஏன் இதை தவிர்க்க வேண்டும்.
சப்போட்டா பழத்தின் தீமைகள்
சப்போட்டா பழத்தில் அதிகளவு லேடெக்ஸ் மற்றும் டானின்கள் உள்ளது. அவை மிகவும் கசப்பு தன்மை உடையதாக இருக்கும். எனவே அதிகளவு சப்போட்டாவை உட்கொண்டாலோ அல்லது நன்றாக பழுக்காத சப்போட்டா பழங்களை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு வாய் புண், தொண்டை அரிப்பு மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பச்சையான சப்போட்டாவை சாப்பிடுவதால் அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தால் சப்போட்டா சாப்பிடும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதனை உட்கொள்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகாரிக்கும்.
ஒவ்வாமை
லேடெக்ஸ் மற்றும் டானின்கள் எனப்படும் கலவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில நோயாளிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சப்போட்டா பழங்களை உட்கொண்ட உடனேயே எழும் தோல் வெடிப்புகள் மற்றும் கழுத்தைச் சுற்றி வீக்கம் போன்ற வடிவங்கள் உருவாகும்.
செரிமான பிரச்சனைகள்
சப்போட்டாவை அதிகமாக உட்கொள்வது குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக குழந்தைகளில். இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது செரிமானத்தை பாதிக்கலாம் மற்றும் வயிற்றை பாதிக்கலாம்.
நீரிழிவு நோய்
சப்போட்டா பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளதால் இரத்தத்தில் சுக்ரோஸ் அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்பகாலத்தில் சப்போட்டாவின் தீமைகள்
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு சப்போட்டா பழங்களை சாப்பிடும் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் எந்த பக்க விளைவுகளையும் அனுபவிப்பதில்லை. ஆனால், சில கர்ப்பிணிப் பெண்களுக்கு, இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்
* சப்போட்டா பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன, எனவே கர்ப்ப காலத்தில் இந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது, தாய்க்கு தேவையற்ற எடையை ஏற்படுத்தும். இந்த அதிக எடை அதிகரிப்பானது உடலுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் மிதமான உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.
* சப்போட்டா பழத்தில் அதிக அளவு பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளன. கர்ப்ப காலத்தில் சப்போட்டா அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து கர்ப்பகால நீரிழிவு நோயை உண்டாக்கும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது அது உருவாகும் அபாயம் உள்ளவர்கள் சப்போட்டாவைத் தவிர்க்க வேண்டும்.
This Post Has 2 Comments
Really appreciate you sharing this article post.Really looking forward to read more. Awesome.
Thank You So Much For Your Comment