Sarpatta Parambarai 2 : சார்பட்டா 2 படத்திற்காக தீவிர பயிற்சியில் ஆர்யா

சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் (Sarpatta Parambarai 2) உருவாக இருக்கிறது.

சார்பட்டா பரம்பரை :

பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, 2021 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியானது. இப்படத்தில் கபிலன் என்கின்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்தார். இப்படத்தில் கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், ஜான் கொக்கன், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து அமேசான் பிரைமில் இப்படம் வெளியிடப்பட்டது. 70-களில் சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமானது. அதைச் சுற்றி உருவான குழுக்களுக்கு இடையேயான சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து சார்பட்டா படத்தை ரஞ்சித்  உருவாக்கினார். இப்படத்திற்கு எழுத்தாளர் தமிழ் பிரபா, ரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களில் சாக்லேட் பாயாக நடித்தவர் ஆர்யா. அதே சமயம் அவன் இவன், நான் கடவுள், மகாமுனி என முற்றிலும் மாறுபட்ட, சவாலான கேரக்டர்களில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ கமர்ஷியலாகவும் அதே சமயம் அவருக்கு ஒரு தனித்துவப் படமாகவும் அமைந்தது. கடுமையான பயிற்சி மூலம் தனது உடலை இந்தப் படத்துக்காக தயார்படுத்திக் கொண்டார். அவரது கபிலன் கதாபாத்திரம் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றியது, அவர் தனது குருவுக்காக குத்துச்சண்டை போட்டியின் மூலம் தனது அடையாளத்தைக் கண்டுபிடிக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யாவின் கேரக்டரைத் தவிர டான்ஸிங் ரோஸ், வேம்புலி என பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் மெருகேற்றியிருந்தார் இயக்குநர் ரஞ்சித்.

Sarpatta Parambarai 2 :

2021 ஆம் ஆண்டு OTT இல் வெளியாகி வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை ஓடிடி தளத்திற்கான வெப் சீரிஸாக உருவாக்க  இருப்பதாக இடைப்பட்ட காலத்தில் தகவல்கள் வெளியாகின. அடுத்தபடியாக வெப் சீரிஸாக இல்லாமல் முழு நீள படமாக வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்காக (Sarpatta Parambarai 2) கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குனர் ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருப்பதால், தனது அடுத்த படம் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் Sarpatta Parambarai 2 அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply