Sathiya Sothanai : சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்...

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி கங்கை அமரன், ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் ஸ்வயம் சித்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்திய சோதனை திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசைமைப்பாளர் ரகுராம் இசைமைத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு நகைச்சுவை படத்தை பார்த்து உறுதியாக சொல்லும் அளவிற்கு ஒரு நல்ல முழு நீள நகைச்சுவை படமாக வந்துள்ளது சத்திய சோதனை திரைப்படம்.

கதை சுருக்கம்

இரண்டு காவல் நிலையங்களின் எல்லையில் ஒரு விபத்தோ அல்லது கொலையோ நடந்து விட்டால் காவல் நிலையங்களின் எல்லையை காரணமாக காட்டி காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் புகாரை பதிவு செய்ய மாட்டார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகாரை தள்ளிவிட பார்ப்பார்கள். ஆனால் மாமூலை பங்கு பிரிப்பதற்கு மட்டும் அனைவரும் கைகோர்த்துக் கொள்வார்கள். இப்படி ஒரு கருத்து தான் தமிழ் நாட்டில் நடக்கிறது. இந்த கருத்தை வைத்து காவல் நிலையங்களின் படத்தை இயக்குனர் கொடுத்துள்ளார்.

வேலையில்லாமல் பொறுப்பற்ற ஆளாக இருக்கும் கதை நாயகன் பிரதீப் ஒரு நாள் தன் காதலியை சந்திப்பதற்காக செல்லும் போது அந்த பகுதியில் இறந்த நிலையில் ஒரு சடலத்தை காக்கிறான். தொடர்ந்து எந்த பயமும் இல்லாமல் வெட்டி கொலைசெய்யப்பட்ட சடலத்தில் இருந்த கைக்கடிகாரம், தங்கச் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பிணத்தை ஒரு ஓரமாக மறைத்து வைத்து விட்டு காவல் நிலையம் நோக்கி செல்கிறார். காவல் துறையினரிடம் பிரதீப் சொல்வதற்கு முன்பே, கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெட்டப்பட்டு இறந்த ஆள் கடைசியாக 50 சவரன் அணிந்திருந்தது தெரியவருகிறது.

ஆனால் சடலத்தில் ஒரு நகைகூட இல்லாததால் சந்தேகம் ஏற்படுகிறது. காவல் துறையினர் மீண்டும் காவல் நிலையம் வந்தடைகின்றனர். அங்கு பிரதீப் நடந்ததை கூறி கைக்கடிகாரம், தங்கச் சங்கிலி, செல்போன் ஆகிவற்றை ஒப்படைகிறான். அந்த உடலில் சின்ன சின்ன தங்கச் சங்கிலிகள் உடலில் இருந்ததாகவும் வரும் வழியில் தொலைத்துவிட்டதாகவும் கூறுகிறார். பின்னர் கொலையாளிகள் தாமாகவே முன்வந்து சரண்டர் ஆகிறார்கள். இவர்கள் நாங்கள் இந்த நகையை எடுக்கவில்லை என்று தெளிவாக கூறுவதுடன் இறந்தவர் எந்த எந்த நகைகளை அணிந்திருந்தார் என தெளிவாக கூறுகின்றனர். காவல் துறையினர் பிரதீப் பக்கம் திரும்புகின்றனர். என்ன சொன்னாலும் நம்பாத காவல் துறையினர் பிரதீப்பை அடித்து விசாரிக்கின்றனர். இதனை தொடர்ந்து பிரதீப் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதையாகும்.

Sathiya Sothanai - திரை விமர்சனம்

கதையின் போக்கை நகைச்சுவை, யதார்த்தம், சஸ்பென்ஸ் என நன்றாக நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும் காவல் துறையினரின் மனித உரிமை மீறல்களை இயக்குனர் சரியாக பதிவு செய்துள்ளார். லத்திகளும், சவுக்குகளும் எளிய மனிதர்களை நோக்கியே பாய்கின்றன. ரகுநாத்தின் இசையில் தொடக்கத்தில் வரும் ஐயப்பப் பாடல் மனதைக் கவரும் வகையில் உள்ளது. அப்பாவிதனமான கேரக்டருக்கு பிரேம்ஜி பொருந்தியுள்ளார். இவர் நிஜத்தில் எவ்வாறு பேசுவாரோ அதே போல் முக பாவனைகளை வைத்து நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியான முறையில் நடித்துள்ளனர். ரேஷ்மா மற்றும் ஸ்வயம் சித்தா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளனர். துணை நடிகர்களை வைத்து நல்ல கருத்தை தந்த இயக்குனருக்கு சபாஷ் என்று சொல்லலாம். நீங்கள் உங்கள் வாழ்கையில் இதுவரை காவல் நிலையத்திற்கு சென்றிருந்தால் இந்த படம் உங்களுக்கு நினைவுகளை கொடுக்கும்.

Latest Slideshows

Leave a Reply