Sattam En Kaiyil Review : சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்

நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் நடிகர் சதிஷ். இவர் தற்போது சட்டம் என் கையில் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சிக்ஸர் திரைப்படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜய் ராஜ், வித்யா பிரதீப், சம்பதா, பாவெல் நவகீதன், ரித்விகா தமிழ்செல்வி, மைம் கோபி, பவா செல்வதுரை, கஜராஜ், வெண்பா ஆகியோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதைக்களம் கொண்ட இப்படம் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், படம் எப்படி இருக்கும் (Sattam En Kaiyil Review) என்பதை பார்க்கலாம்.

சட்டம் என் கையில் கதை :

சட்டம் என் கையில் என்பது இரவு நேரத்தில் ஏற்காடு மலையில் நடக்கும் கதையை மையமாக்கும் படம். இதில் சதீஷ் டாக்ஸி டிரைவராக இருக்கிறார். ஒருநாள் எதிர்பாராத விதமாக எதிரில் பைக்கில் வரும் ஒருவரை இடித்துவிடுகிறார். இந்த விபத்தில் பைக்கில் வந்தவர் இறந்து விடுகிறார். இறந்தவரின் உடலை மறைக்க சதீஷ் தனது காரின் டிக்கியில் போட்டுகொண்டு செல்லும்போது பாஷா என்கிற போலீசாரிடம் மாட்டிக்கொள்கிறார். அதேநேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல் துறை கண்டுபிடிக்கிறார்கள். இந்த கொலை விசாரணை நடக்கிறது. கொலை செய்யபட்டது யார்? நாயகனான சதீஷ் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாரா? என்பதையே சட்டம் என் கையில் திரைப்படம் கூறுகிறது.  

Sattam En Kaiyil Review :

த்ரில்லர் படம் என்றாலே அதில் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும். அந்த ட்விஸ்டை இயக்குநர் சரியான நேரத்தில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளார் என்பதே படத்தின் வெற்றியாக உள்ளது. மற்ற படங்களில் ட்விஸ்ட் இஷ்டத்துக்கு இருக்கும். இந்த படத்தை பொறுத்தவரை கதாபாத்திரங்களுக்கு எந்த அறிமுகமும் இல்லாமல் படம் ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே கதை தொடங்கிவிட்டது. குற்றத்தை செய்யும் சதீஷ் அதை மறைக்க நினைக்கிறார். பிளாஷ்பேக் தெரியாமலே பார்வையாளர்களாக நம்மால் உடன்பட முடியவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதையை பார்த்தால் கதை சுவாரசியமாக இருக்கிறது. சதீஷை வைத்து அஜய் ராஜ், பாவெல் இடையே நடக்கும் அதிகார விளையாட்டு நகைச்சுவையாக இருக்கிறது. விறுவிறுப்பான இசையுடன் விசாரணை நடப்பது நன்றாக இருக்கிறது. படத்தின் காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும் கதாபாத்திரங்களை தொடர்புபடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை நன்றாக நடித்து பாராட்டு பெறுகிறார்கள். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா சிறப்பான முயற்சியை கையாண்டுள்ளார். பனி நிறைந்த இரவு காட்சி ஒரு புதுவித சூழலை (Sattam En Kaiyil Review) கொடுக்கிறது.

Latest Slideshows

Leave a Reply