SBI Bank Jobs : ரூ.63000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது!

வங்கி வேலையை தேடுபவரா நீங்கள் உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்.பி.ஐ (SBI Bank Jobs) வங்கியானது தற்போது வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் வங்கி அதிகாரிகள் பணியிடத்திற்கு, விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இன்று (செப்.8) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (SBI) வங்கி, நாடு முழுவதும் காலியாக இருக்கும் 2,000 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை எழுத்துத்தேர்வு, மற்றும் நேர்காணல் வாயிலாக நிரப்பப்பட உள்ளது. செப்.8 முதல் வரும் செப்.27-ம் தேதி ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதத்தில் முதனிலை எழுத்துத்தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI Bank Jobs - கல்வித்தகுதி (Qualification) :

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் (UG) முடித்திருக்க வேண்டும்.

SBI Bank Jobs - வயது வரம்பு (Age) :

  • 01 Apr 2023 நிலவரப்படி, எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI Bank Jobs - சம்பளம் விவரம் (Salary Details) :

  • எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.41,960 முதல் ரூ.63,840 வரை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) :

  • எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பணியிடத்திற்கு மொத்தமாக 2,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :

  • எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் பணிக்கு முன்னிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் (Payment Process) :

  • விண்ணப்பக்கட்டணமானது பொதுப்பிரிவு/பிற்படுத்தப்பட்டோர் எனில் ரூ.750 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date) :

  • எஸ்.பி.ஐ (SBI) வங்கி அதிகாரிகள் பணியிக்கு விண்ணப்பிக்கவும் தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தவும் செப்.27-ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு :

  • எஸ்.பி.ஐ (SBI) வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sbi.co.in தளத்தை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply