SBI Clerk Notification 2025 : எஸ்பிஐ வங்கியில் 13735 கிளார்க் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (SBI Clerk Notification 2025) வெளியாகியுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியானது மற்ற பொதுத்துறை வங்கிகளை போல் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IPPS) மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பாமல் நேரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு தேவையான பணியிடங்களை நிரப்பி வருகிறது.

SBI Clerk Notification 2025

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்தியா முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 13735 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு (SBI Clerk Notification 2025) அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிகிரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு (SBI Clerk Notification 2025) 1.4.2024 அன்று வரை 20 வயது முதல் 29 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

எஸ்பிஐ வங்கியில் இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.26000/- முதல் ரூ.64000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு (SBI Clerk Notification 2025) முதல் நிலை தேர்வு (First Level Exam), மொழித்திறன் தேர்வு, மெயின்ஸ் தேர்வு (Mains Exam) ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. தேர்வு நடைபெறும் இடம் (Exam Center)

எஸ்பிஐ வங்கியில் இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு தேர்வு மையங்களை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், நாமக்கல், தஞ்சை, கடலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

எஸ்பிஐ வங்கியில் இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு (SBI Clerk Notification 2025) தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும் எனவும், SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

எஸ்பிஐ வங்கியில் இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 7.1.2025 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply