SBI JOBS : எஸ்.பி.ஐ வேலை வாய்ப்பு ! மொத்த காலியிடங்கள் 6160

வங்கி வேலை வேண்டுமா? எஸ்.பி.ஐ வங்கியில் 6160 பயிற்சி பணியிடங்கள் வெளியாகியுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

SBI JOBS : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மொத்தமாக 6160 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பணியிடங்களில் தமிழகத்திற்கு மொத்தம் 648 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் 21.09.2023-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை : மொத்தமாக 6160 பயிற்சி பணியிடங்கள்.

SBI JOBS - கல்வித் தகுதி :

  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

  • விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI JOBS - சம்பள விவரங்கள் :

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தேர்ந்து எடுக்கப்படுவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.25500/- வரை

SBI JOBS - தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பயிற்சி பதவிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் இரண்டு படிநிலைகள் உண்டு. ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு ஆகியவை ஆகும். குறிப்பாக இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு :

ஆன்லைன் எழுத்துத் தேர்வானது மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம், ஆங்கிலம், திறனறிதல் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த ஆன்லைன் தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் மட்டுமே.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு முடித்த பிறகு வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். இந்த இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள், அதன்பின் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, கிளர்க் பணியிடங்களுக்கான தேர்வு முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sbi.co.in/web/careers/current-openings (or) https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற அதிகார இணையதளப் பக்கங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

இந்த பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 21.09.2023 அன்றுவரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய :

https://sbi.co.in/documents/77530/36548767/310823ENGAGEMENT+OF+APPRENTICE+2023+ADVERTISEMENT+CRPD_APPR_2023-24_17.pdf/fb7c7b06-3c72-4c55-cd2b-1c9bbc0307ce?t=1693485209035 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply